ஆப்நகரம்

பிரேஸில் ஆற்றை கடக்கும் 50 அடி நீள அனகோண்டா, ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வைரல் வீடியோ!

ட்விட்டரில் வைரலாக பகிரப்படும் 50 அடிநீள அனகோண்டா பாம்பு வீடியோ, உண்மையா, போலியா? என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

Samayam Tamil 30 Oct 2020, 5:26 pm
இன்று (30-10-2020) ஒரு ட்விட்டர் பக்கத்தில் ஆற்றை கடக்கும் 50 அடி நீளம் அனகோண்டா பாம்பு ஒன்று என வீடியோ ஒன்று பதிவாகி இருந்தது. இதை பார்த்து பலரும் வியந்து பகிர துவங்கினார்கள். ஆனால், அந்த வீடியோ, உண்மையா? பொய்யா என்ற சந்தேகமும் அதே சமயம் பலர் இடையே எழுந்தது.
Samayam Tamil பிரேஸில் ஆற்றை கடக்கும் 50 அடி நீள அனகோண்டா, ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வைரல் வீடியோ!


எடிட் செய்து வெளியிடப்பட்ட இந்த வீடியோ, இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2018ம் ஆண்டே ஒரு முறை இதே தகவலுடன் வெளியாகி இருந்தது. பிரேசிலின் க்ஸிங்கு ஆற்றில் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறப்பட்டது. மேலும், இன்று (30-10-2020) பதிவான ஒரே நாளுக்குள் இந்த வீடியோவை 7 லட்சத்திற்கும் மேலானவர்கள் பார்த்து பகிர்ந்திருந்தனர்.


ஆனால், உண்மை என்னவெனில், இந்தவீடியோ 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் யூடியூபில் வெளியான பதிவாகும். உண்மையில், ஒரு பெரிய அனகோண்டா சாலையில் தேங்கியிருக்கும் நீரை கடந்து செல்லும் வீடியோ தான் அது. அந்த யூடியூப் விடியோ, "Giant anaconda crossing the road" என்ற தலைப்பில் வெளியாகி இருந்தது.


இதை யாரோ டவுன்லோட் செய்து, அதை எடிட் செய்து, 50 அடிநீள அனகோண்டா என்று பெயர்சூட்டி, ஆற்றை கடக்கிறது, கடலை கடக்கிறது என அளந்து கட்டி, பகிர்ந்துள்ளார். உண்மை விவரம் தெரியாத நெட்டிசன்கள் இதை ஆச்சரியத்துடன் கண்டு பகிர்ந்து வருகின்றனர்.

எனவே இந்த 50 அடிநீள அனகோண்டா கதை சுத்த பொய் என்பதை, இங்கே பதிவிட, நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

அடுத்த செய்தி