ஆப்நகரம்

Athi Varadar : "நான் அத்தி வரதரை எதிர்க்கிற கட்சி அல்ல...!" சர்ச்சை பேச்சிற்கு சுகிசிவம் விளக்கம்

அத்தி வரதர் குறித்து சுகிசிவம் பேசிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து அதற்கு விளக்கம் தெரிவித்து சுகிசிவம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 6 Aug 2019, 4:08 pm
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு அருள் பாலிக்க வெளியே குளத்திற்குள் இருந்து வெளியே வரும் அத்தி வரதர் தற்போது வெளியே முதலில் சயன கோலத்திலும், தற்போது நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
Samayam Tamil நான் அத்தி வரதரை எதிர்க்கிற கட்சி அல்ல


40 நாட்கள் மட்டுமே அத்தி வரதரை காண முடியும் என்பதால் லட்சோப லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை காண காஞ்சிபுரத்திற்கு குவிந்து வருகின்றனர்.
Read More : அத்தி வரதர் கோவிலில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் சம்பவம்..! பெருமாளின் மீது கொண்ட பக்தி தான் இதை செய்ததா?

இந்நிலையில் ஆன்மீக பேச்சாளர் சுகிசிவம் சிவகாசியில் நடந்த ஒரு விழாவில் பேசும்போது அவரது பாணியில் அத்தி வரதரை தரிசிக்க பலர் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். அப்படி ஏன் கடவுளை காண வேண்டும்? உங்களை கஷ்டப்படுத்த நினைப்பாரா கடவுள்? நீங்கள் ஏன் உங்கள் வீட்டில் இருக்கும் கடவுளை காண வேண்டும்? இவ்வளவு இடிபாடுகளுடன் சென்று பல துன்பங்களை அனுபவித்து கடவுளை காணாவிட்டால் என்ன என பேசியிருந்தார்.

இந்த பேச்சிற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளப்பியது. சுகிசிவம் தனது கருத்துக்களை திருப்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எல்லாம் கோரிக்கை விடுத்தனர்.

Read More : பிறப்பால் சாதி பார்ப்பதில் தவறில்லை...! - வைரலாகும் சர்ச்சை வீடியோ..!

இதற்கும், இவர் ஏற்கனவே முருக வழிபாடு மற்றும் சுப்பிரமணிய வழிபாடு குறித்து பேசியதற்கு சேர்த்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அத்தி வரதர் மீதோ இந்து மதத்தின் மீதோ எதிர் கருத்துக்களை வீச வேண்டும் என்பது என் நோக்கமல்ல மக்கள் படும் கஷ்டங்களை பார்த்த பின்பு இந்த கருத்தை தெரிவித்தேன். என்னை பொறுத்தவரை கடவுளை வெளியில் தேடுவதை விட நமக்குள் தேட வேண்டும் என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அடுத்த செய்தி