ஆப்நகரம்

மணமேடையில் குடிபோதையில் தள்ளாடிய "மாப்பிள்ளை"; விருந்தினர்களை சிறை பிடித்த பெண் வீட்டார்...!

மாப்பிள்ளைக்கு குடிபழக்கம் இருக்கிறது என்றால் திருமண நாளான்றுமா குடிக்க வேண்டும்? அதுவும் தள்ளாடும் அளவிற்கு சரி மாப்பிள்ளை தான் இப்படி என்றால் மாப்பிள்ளையின் அப்பாவும் இப்படி தான் இருக்கிறார். என பெண் வீட்டாருக்கு கோபம் வந்தது.

Samayam Tamil 26 Jun 2019, 5:26 pm
திருமணம் என்றால் ஒரு குடும்பத்தின் சந்தோஷமான விஷயம். குடும்பத்தில் புதிய மாற்றம் நடக்கும் தருணத்தை இதை கொண்டாட்டமாகவும் மிகழ்ச்சியாகவும் மக்கள் நடத்துவார்கள். ஆனால் பீகாரில் ஏற்பாடான ஒரு திருமணம் இவ்வாறாக நடக்கவில்லை.
Samayam Tamil மணமேடையில் குடிபோதையில் தள்ளாடிய மாப்பிள்ளை


பீகார் மாநிலம் சம்ஷித்பூர் பகுதியில் ஒரு சுரஜ்குமார் என்பவருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணம் நடக்கும் நேரத்தில் மணமகன் முழு சரக்கில் பயங்கரமான மப்பில் தள்ளாடியுள்ளார். இதை கண்ட பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து கேட்கலாம் என அவர்கள் மாப்பிள்ளையின் தந்தையை தேடியபோது அவரும் சரியான மப்பில் தள்ளாடியபடி இருந்துள்ளார். இதை கண்டதும் பெண்ணின் குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி, மாப்பிள்ளைக்கு குடிபழக்கம் இருக்கிறது என்றால் திருமண நாளான்றுமா குடிக்க வேண்டும்? அதுவும் தள்ளாடும் அளவிற்கு சரி மாப்பிள்ளை தான் இப்படி என்றால் மாப்பிள்ளையின் அப்பாவும் இப்படி தான் இருக்கிறார். என பெண் வீட்டாருக்கு கோபம் வந்தது.

இதையடுத்து பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தினர். திருமணத்தை நிறுத்தியது மட்டுமல்ல பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரின் அனைவரது முன்னிலையிலும் பெண்ணின் தந்தை ஓம் பிரகாஷ் என்பவர் பேசி தான் திருமணத்திற்காக பல லட்சம் செலவு செய்துள்ளேன் அந்த விழாவில் மாப்பிள்ளையும் அவரது தந்தையும் குடித்து விட்டு தள்ளாடினால் நான் எப்படி அவர்களை நம்பி என் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க முடியும்? திருமணம் செய்து கொடுக்க முடியாது.

அதே நேரத்தில் இந்த திருமணம் மாப்பிள்ளை வீட்டினரால் தான் நின்றது. அதனால் மாப்பிள்ளை வீட்டு விருந்தினர்களை திருமணத்திற்கான செலவு தொகை மாப்பிள்ளை வீட்டினர் கொடுத்தால் மட்டுமே திரும்ப தர முடியும் என கூறினர். அதன் பின்பு மாப்பிள்ளை வீட்டார் ரூ3.5 லட்சத்தை கொடுத்த பின்பே அவர்கள் மாப்பிள்ளை வீட்டாரை மண்டபத்தை விட்டு வெளியே செல்ல அனுமதித்தனர்.

திருமண நாளன்றே மாப்பிள்ளை குடித்து விட்டு தள்ளாடியபடி நின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பாக பேசப்படுகிறது. இந்த செய்தி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி