ஆப்நகரம்

2015லேயே குஜராத்திற்கு வந்தது கொரோனா...

2015ம் ஆண்டே குஜராத்திற்கு கொரோனா வந்த கதை தெரியுமா? இதை படியுங்கள்.

Samayam Tamil 9 May 2020, 4:28 pm
இன்று உலகமே கொரோனா வைரஸ் பிடியில் இருக்கிறது என்று சொல்லலாம் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் குறித்த பீதி அதிகமாகியுள்ளது. மக்கள் எல்லாம் தங்கள் வீடுகளிலேயே பதுங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வருகின்றனர்.
Samayam Tamil corona hotel


நிலைமை இப்படியிருக்கையில் கடந்த 2015ம் ஆண்டே குஜராத்திற்கு கொரோனா வந்துவிட்டது என சொன்னால் நம்புவீர்களா? அட பதறாதீர்கள். குஜராத் - ராஜஸ்தான் எல்லையில் உள்ள பனஸ்கந்தா என்ற பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு கொரோனா என்ற உணவு விடுதி திறக்கப்பட்டது.

இந்த செய்திதான் தற்போது சமூகவலைத்தளங்களில் குஜராத்திற்கு 2015ம் ஆண்டே கொரோனா வந்துவிட்டதாக பரப்பி வருகின்றனர். இந்த லாக்டவுண் நேரத்தில் அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் அந்த ஓட்டலுக்கு முன்னே நின்று போட்டோ எடுத்து செல்கின்றனர். அப்பகுதியில் உள்ள பர்கத் பாய் என்பவர் தான் அப்பகுதியில் கடையை நடத்தி வருகிறார்.

அவரிடம் பத்திரிக்கையாளர்கள் இந்த கடைக்கு ஏன் இப்படி பெயர் வைத்தீர்கள் என கேட்ட போது அவர் உருது மொழியில் கொரோனா என்றால் கேலக்ஸி என அர்த்தம் அதன் அடிப்படியில் தான் இப்படி பெயர் வைத்தோம் என தெரிவித்துள்ளார்.

தற்போது ராஜஸ்தானிலிருந்து பாலி நோக்கி செல்பவர்கள் இந்த ஓட்டலின் பெயரை பார்த்து ஒரு நிமிடம் நின்று புகைப்படம் எடுத்துவிட்டு செல்கின்றனர்.

அடுத்த செய்தி