ஆப்நகரம்

TikTok செய்கிறேன் என வாய் உள்ளே ஹார்மோனிக்காவை வைத்த பெண்... அடுத்து நடந்தது?

கனடாவில் ஒரு பெண் வாயில் ஹார்மோனிக்காவை வைத்து சிக்கிக்கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 3 Feb 2020, 10:20 am
கனடாவின் ஒன்டேரியா மாகாணத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி மோலி ஓ பிரென். இவர் டிக்டாக் மூலம் தனது தம்பியை மகிழ்விக்க நினைத்து அதற்காக ஹார்மோனிக்கா எனப்படும் வாயில் வைத்து இசைக்கும் இசைக் கருவியை முழுவதும் வாய்க்குள் வைத்து விடியோ எடுக்க முடிவு செய்தார்.
Samayam Tamil hormonica


எதிர்பாராத விதமாக அந்த ஹார்மோனிகா முழுவதும் அவரது வாய்க்குள் சிக்கிக்கொண்டது. இதனால் அவர் வலி தாக்காமலிருந்துள்ளார். அதனையும் விடியோ எடுத்து வெளியிட்டார். இந்த சம்பவம் நடந்து அரை மணி நேரமாகியும் அவர் வாயில் வைத்திருந்த ஹார்மோனிக்காவை வெளியே எடுக்க முடியவில்லை.

@mollieobrien going to cheo to get my harmonica removed... #foryou #fyp #foryoupage #dissapointment #failure #mymomdoesntloveme #idiot ♬ I just did a bad thing bill wurtz - cameron.tr
Also Read : ரத்தம் தெறிக்க தெறிக்க 6 பேரை தலையை வெட்டி கொன்று சமைத்து சாப்பிட்டு சென்ற மர்ம கொலைகாரன்...!

அவர் மூச்சு விடும் போது, பேசும் போது எல்லாம் ஹார்மோனிக்காவிலிருந்து சத்தம் வந்து கொண்டே இருந்தது. இதையடுத்து அவர் மருத்துவரைச் சந்தித்து தனது வாயில் சிக்கிய ஹார்மோனிக்காவை வெளியே எடுத்தார். பின்னர் தான் ஹார்மோனிக்கா வாயில் சிக்கியிருந்த போது எடுத்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு இனி யாரும் இப்படி முட்டாள் தனமாக முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி