ஆப்நகரம்

பெங்காலி பெண்ணை திருமணம் செய்தால் ரூ40 ஆயிரம் பரிசு... 90ஸ் கிட்ஸ் உங்களுக்கு மட்டும் கிடையாது....

அசாமில் வசிக்கும் பெங்காலி பெண்களைத் திருமணம் செய்யும் ஆண்களுக்கு ரூ40 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 20 Feb 2020, 11:15 am
அசாமில் உள்ள பெங்காலி இந்து பெண்கள் அல்லது ஆண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை உள்ளூர் அதாவது அசாம் மக்கள் மத்தியிலிருந்து தேர்வு செய்தால் அவர்களுக்கு ரூ40 ஆயிரம் ரொக்கம் அவர்களின் வாழ்வாதாரத்திற்காகப் பரிசாக வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil பெங்காலி பெண்ணை திருமணம் செய்தால் ரூ40 ஆயிரம் பரிசு


அம்மாநில அரசு மாநில மொழியியல் சிறுபான்மையினர் மேம்பாட்டு வாரியம் சார்பில் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலங்களில் உள்ள சமூகங்களுக்கிடையே நல்லுறவு ஏற்படும் எனக் கருதுகிறது.

பொதுவாக பெங்காலியிலிருந்து அசாமிற்கு வந்த மக்களும், அசாமில் பூர்வீகமாக உள்ளவர்களும் திருமணம் செய்து கொள்ள சமூகத்தில் பெரும் எதிர்ப்பு உள்ளது. இப்படியாகத் திருமணம் செய்து கொள்பவர்களுக்குச் சொத்து கிடையாது எனப் பெற்றோர்களால் கைவிடப்படுகின்றனர். மேலும் இவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்களை சமூகம் ஒதுக்கி வைக்கிறது. இதனால் இவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது அரசின் கடமை அதனால் இந்த முறையில் திருமணம் செய்பவர்களுக்கு ரொக்க பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : இந்தியாவில் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்ட பலர் இன்று உயிருடன் இல்லை.. இவர்கள் எல்லாம் ஏதோ ஒரு மர்ம மனிதனால் கொல்லப்பட்டுள்ளான்..... யாருக்கும் தெரியாத ரகசியம் தற்போது கசிவு

இதற்காக ஒரு தனி வலைத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பெங்காலி - அசாமி தம்பதியினர் பதிவு செய்யலாம். என அரசு அறிவித்துள்ளது. அரசு இதை நல்ல நோக்கத்துடன் செய்தாலும் இதற்குப் பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

எது எப்படியோ தமிழ் நாட்டு மக்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை. தமிழ் நாட்டில் உள்ள 90ஸ் கிட்ஸ்களுக்கு இப்படியான ஏதாவது திட்டம் வருமா? உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி