ஆப்நகரம்

Illegal GST: ரூ4க்கு ஆசைபட்டு ரூ15 ஆயிரத்தை இழந்த ஓட்டல்காரர்..! தயிரால் வந்தது விணை...!

நெல்லையில் தனியார் உணவகம் ஒன்று ரூ40 தயிருக்கு ரூ2 ஜிஎஸ்டி மற்றும் ரூ2 பார்சல் சார்ஜ் வங்கியதால் நுகர்வோர் நீதிமன்றம் அந்த உணவகத்திற்கு ரூ 15 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

Samayam Tamil 10 Jul 2019, 3:04 pm
நெல்லை பாளையங்கோட்டை கோர்ட் அருகே தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த உணவகத்திற்கு சென்ற மகராஜ் என்பவர் தயிர் வாங்கியுள்ளார்.
Samayam Tamil ரூ4க்கு ஆசைபட்டு ரூ15 ஆயிரத்தை இழந்த ஓட்டல்காரர்


ரூ40 மதிப்பிலான தயிருக்கு ரூ 2 ஜிஎஸ்டி வரி மற்றும் ரூ2 பார்சல் கட்டணம் என மொத்தம் ரூ44 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி விதியின் படி தயிருக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கேட்டபோது தனியார் உணவகத்தினர் ஜிஎஸ்டி இல்லாமல் தயிரை வழங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ரூ44க்கு தயரை வாங்கி சென்ற மகராஜ் அதற்கான பில்லையும் பெற்றுக்கொண்டார். பின்னர் இது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனியார் உணவு விடுதி மீது தான் தவறு என கூறி இந்த சம்பவத்தால் மனமுடைந்த மகராஜ்ஜிற்கு நஷ்ட ஈடாக ரூ10 ஆயிரம், வழக்கு செலவிற்காக ரூ5 ஆயிரம் மற்றும் அவரிடம் இருந்து அதிகமாக பெறப்பட்ட ரூ4 எல்லாம் சேர்ந்து மொத்தம் ரூ15,004 செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும் இதை 30 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் அதற்கு 6சதவீதம் வட்டி விதிக்கப்பட்டும் எனவும் உத்தவிட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் அந்த வரியின் பெயரை சொல்லி சம்மந்தமே இல்லாமல் ரூ40க்கு ரூ2 ஜிஎஸ்டி வரி விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த தவறுக்காக ரூ15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி