ஆப்நகரம்

ஏடிஎம்மை ஹேக் செய்வது எப்படி? டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு வைரலான பெண்

ஏடிஎம் மிஷினை ஹேக் செய்து பணம் எடுப்பது குறித்து பெண் ஒருவர் டிக்டாக்கில் வெளியிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 2 Jul 2019, 6:55 pm
பணத்தேவை யாருக்கு தான் இல்லை. நூறுகளில் சம்பாதிப்பவனுக்கு ஆயிரத்தில் தேவையிருக்கிறது. ஆயிரத்தில் சம்பாதிப்பவனுக்கு லட்சத்தில் தேவையிருக்கிறது. லட்சத்தில் சம்பாதிப்பவனுக்கு கோடிகளில் தேவையிருக்கிறது. இப்படி இந்த உலகில் பணத்தேவையில்லாத மனிதனை நாம் பார்க்கவே முடியாது.
Samayam Tamil ஏடிஎம்மை ஹேக் செய்வது எப்படி


ஒரு காலத்தில் வங்கி காசோலை எழுதி கொடுத்து காத்திருந்து பணம் வாங்கிய காலம் போய் இன்று எல்லோரும் ஏடிஎம்மில் சென்று பணம் எடுத்து வருகிறோம். ஏடிஎம்மில் எடுக்கப்படும் நம் கணக்கில் இருந்து கழிக்கப்படும்.

இந்நிலையில் சமீபத்தில் சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஏடிஎம் இயந்திரத்தை எப்படி ஹேக் செய்து பணம் எடுப்பது என ஒரு விளக்கம் அளித்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணுங்கள்
நீங்கள் எப்படி இந்த வீடியோவை முதலில் ஆர்வமாக பார்த்தீர்களோ அப்படி தான் நாங்களும் பார்த்தோம். இறுதியாக அவர் எந்த விதமான ஹேக்கும் செய்யாமல் சாதாரணமாவே பணத்தை எடுத்து சென்றார். இந்த வீடியோ தற்போது நெட்சன்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டது.

அடுத்த செய்தி