ஆப்நகரம்

அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் கொம்பு முளைக்குமாம்...! விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

செல்போனை மக்கள் அதிக நேரம் குனிந்தபடியே பயன்படுத்தி வருவதால் தலையின் பின்புறம் மண்டை ஓட்டிற்குள் கூர்மையான எலும்பு ஒன்று வளர்வதாக கண்டுபிடித்துள்ளனர்.

Samayam Tamil 22 Jun 2019, 6:20 pm
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை செல்போன் வைத்திருப்பதையே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளில் செல்போன் இல்லாத ஆட்களே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. குறிப்பாக தற்போது உள்ள அத்தனை போன்களும் ஸ்மார்ட் போன்கள் தான்.
Samayam Tamil அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் கொம்பு முளைக்குமாம்


இன்று வயது வித்தியாசம் பார்க்காமல் பெரும்பாலான மக்கள் செல்போனிற்கு அடிமையாகிவிட்டனர். ஷாப்பிங், பேங்கிங், கேம்ஸ், சமூகவலைதளம் என பல வசதிகள் செல்போனிற்குள்ளேயே வந்துவிட்டன.

இந்நிலையில் ஆஸ்திரேலிய சன்ஷைன் பல்கலை.,யை சேர்ந்த விஞ்ஞானிகள் அதிக நேரம் செல்போனை பயன்படுத்த துவங்கியதால் நம் உடல் வடிவில் மாற்றம் ஏற்பட துவங்கியிருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். அதில் அவர்கள் செல்போனை மக்கள் அதிக நேரம் குனிந்தபடியே பயன்படுத்தி வருவதால் தலையின் பின்புறம் மண்டை ஓட்டிற்குள் கூர்மையான எலும்பு ஒன்று வளர்வதாக கண்டுபிடித்துள்ளனர். அதிக நேரம் குனிந்தபடியே இருப்பதால் தலையின் முழு எடையும் மண்டை ஓட்டின் பின்புறம் செல்கிறது. இதனால் ஏற்படும் தசைநாண்கள், தசைநார்களால் தலையின் பின்புற மண்டை ஓட்டில் கூர்மையான எலும்பு வளர்வதாக தெரிவித்துள்ளனனர்.

அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவதால் தலையில் கொம்பு முளைக்கும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள செய்தி வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி