ஆப்நகரம்

Science in Bumrah Action: வெளியானது பும்ராவின் பவுலிங் ரகசியம்; உலககோப்பையில் இந்திய அணி வெற்றிக்கு பெரும் பாதிப்பு...!

இன்னும் சில நாட்களில் உலககோப்பை கிரிக்கெட் போட்டி துவங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா கோப்பையை கைப்பற்ற பல வாய்ப்புகள் இருக்கிறது. உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் விராட் கோஹ்லி இந்திய அணியின் கேப்டன். உலகின் தலை சிறந்த பவுலர் பும்ரா இந்தியா அணியில் இருக்கிறார்.

Samayam Tamil 20 May 2019, 3:14 pm
இன்னும் சில நாட்களில் உலககோப்பை கிரிக்கெட் போட்டி துவங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா கோப்பையை கைப்பற்ற பல வாய்ப்புகள் இருக்கிறது. உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் விராட் கோஹ்லி இந்திய அணியின் கேப்டன். உலகின் தலை சிறந்த பவுலர் பும்ரா இந்தியா அணியில் இருக்கிறார்.
Samayam Tamil வெளியானது பும்ராவின் பவுலிங் ரகசியம்


மேலும் தோனி, தவான், ரோஹித் என ஒரு பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் பலரும் எதிர்பார்ப்பது பும்ராவின் பவுலிங்கை தான் அவரது பவுலிங்கை சமாளிக்க முடியாமல் பலர் திணறுகின்றனர்.

இந்நிலையில் ஐஐடி கான்பூரை சேர்ந்த சஞ்சய் மிட்டல் என்ற பேராசிரியர் பும்ராவின் பவுலிங்கின் பின்னால் ஒரு ராக்கெட் சயின்ஸ் ஒளிந்திருப்பதாகவும், அந்த சயின்ஸின் விளக்கத்தையும் வெளியிட்டார்.

இது குறித்து குவர் கூறும் போது : "அவர் பந்து வீசும் போஷிஷன் மற்றும் அவர் சுழற்றுவதில் 1000 ஆர்பிஎம் இருக்கும் பட்சத்தில் அது பந்தில் 0.1 ஸ்பின் ரேசியோவை வழங்குகிறது. அதனால் ரிவர்ஸ் மேக்னஸ் எஃபக்ட் எற்படுகிறது.

அவ்வாறான எபக்ட் உடன் பும்ரா பந்தை கீழ் நோக்கி வீசும் போது அந்த பந்தை பேட்ஸ்மேன் அட்டன் செய்வது சிரமமாகிறது. " என குறிப்பிட்டார்.

இந்த உலக கோப்பையில் இந்தியா வெற்றி பெற பும்ராவின் பவுலிங் நிச்சயம் பெரும் உதவியாக இருக்கும். ஆனால் சமீபத்தில் பும்ராவின் பவுலிங் ரகசியத்தை அறிந்து பேராசிரியர் அளித்த இந்த விளக்கம் எதிர்அணியினருக்கு சாதகமாகிவிடகூடாது.

பும்ராவின் பவுலிங்கிற்கு பின்னால் இந்த அறிவியல் உண்மையாக இருந்தால் இதை சமாளிக்க பேட்ஸ்மேன் என்ன விதமாக அறிவியலை கையாள வேண்டும் என அவர்களுக்கு அறிவுரைகள் கிடைக்ககூடும். அவ்வாறு கிடைத்துவிட்டால் உலக கோப்பையின் பும்ராவின் பந்துகளை எதிர் அணியினர் பந்தாட கூட வாய்ப்புகள் உள்ளது.

அடுத்த செய்தி