ஆப்நகரம்

நடுரோட்டில் உயிருக்கு போராடியவரை இப்படி செய்தவர் அம்பானியின் மகனா?

சாலையில் ஒருவர் விபத்தில் சிக்கிவிட்டால் அவருக்கு நம்மால் முடிந்த அளவு உதவியை செய்ய வேண்டும் என்பது மனிதநேயம்.

Samayam Tamil 16 May 2019, 6:20 pm
சாலையில் ஒருவர் விபத்தில் சிக்கிவிட்டால் அவருக்கு நம்மால் முடிந்த அளவு உதவியை செய்ய வேண்டும் என்பது மனிதநேயம். ஆனால் இந்தியாவில் அவ்வாறு உதவி செய்யும் போது ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் நாம் போலீஸ் கோர்ட் என அலைய வேண்டியது இருக்கும் என நினைத்து பலர் உதவி செய்யாமலேயே சென்று விடுவார்கள்.
Samayam Tamil நடுரோட்டில் உயிருக்கு போராடியவரை இப்படி செய்தவர் அம்பானியின் மகனா


சமீபத்தில் மும்பையில் நடந்த விபத்து குறித்து தண்டர் ஆன் ரோடு என்ற பூடியூப் சேனில் ஒரு வீடியோ வெளியானது. அதில் மும்பையின் பிசியான ரோட்டில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி ஒரு பைக் ஓட்டி காயமடைந்து ரோட்டில் கிடந்தார். அவரை சுற்றி பலர் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அந்த வழியாக காரில் சென்றவர்கள் கூட அவருக்கு உதவ முன் வரவில்லை.

இந்நிலையில் அந்த வழியாக வந்த பார்ச்சூனர் மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஆகிய கார்கள் நின்று அதில் அவரை ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த கார்களின் பதிவு எண்ணை கொண்டு அதன் ஓனரை பார்த்த போது அது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கார்கள் என்பது தெரியவந்தது.

இது குறித்து விசாரித்த போது அந்த காரில் அம்பானியின் மகன் இருந்தததாகவும், அவர் தான் உதவி செய்ய சொன்னதாகவும், அதன் பேரிலேயே அதில் வந்தவர்கள் உதவி செய்தததாகவும் தகவல்கள் வெளியானது.

பொதுவாக அம்பானியின் குடும்பத்தினருக்கு பாதுகாப்புக்கு ஆட்கள் அதிகமாக இருப்பார்கள் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும், அவரது மனைவிக்கு ஒய் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

உண்மையில் இதில் குறிப்பிட்டுள்ள படத்தில் இருப்பது அம்பானியின் மகன் தானா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் இது ரிலையன்ஸ் நிறுவனத்தின் கார்தான் என்பது தெளிவாகிறது. எது எப்படியோ அவர்கள் செய்தது நிச்சயம் பாராட்டப்படவேண்டிய காரியம்.

அடுத்த செய்தி