ஆப்நகரம்

6 வயது சிறுமி அழுது கொண்டே விளையாடும் வீடியோ செம வைரல்

சீனாவில் 6வயது சிறுமி டேபிள் டென்னின் பயிற்சி பெறும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 21 Dec 2019, 1:13 pm
நம்மில் பலர் பெற்றோரின் விருப்பத்திற்காக அவர்கள் விரும்பியதை நாம் விருப்பாமல் படித்திருப்போம். இன்றைய பள்ளி செல்லும் மாணவர்களுக்குப் படிப்பு மட்டுமல்ல பெற்றோர்கள் விரும்பிய விளையாட்டு மற்றும் மற்ற பல விஷயங்களும் திணிக்கப்படுகின்றன.
Samayam Tamil 6 வயது சிறுமி அழுது கொண்டே விளையாடும் வீடியோ செம வைரல்


சமீபத்தில் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் என்ற பக்கம் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில் 6 வயது சிறுமியாக லீயீயீ என்பவர் தனக்குப் பிடிக்காமல் அழுதுகொண்டே மிகக் கடுமையான டேபிள் டென்னிஸ் பயிற்சி பெறுகிறார்.

Also Read : இந்த திருடன் வீடு புகுந்து கொள்ளையடிக்கவுமில்லை, கொலை செய்யவுமில்லை ; இவன் செய்து சென்ற காரியத்தை கேட்டால் குழம்பி போவீர்கள்...!

அந்த வீடியோவில் அந்த சிறுமி வாரம் 5-6 பயிற்சி வகுப்புகளில் இந்த சிறுமி கலந்து கொள்வதாகத் தகவல்கள் இருந்தன. இந்த வீடியோ வைரலான நிலையில் பலர் இந்த சிறுமியைப் பெற்றோரைத் திட்டி தீர்த்துள்ளனர். பெற்றோர் அவர்களது விருப்பத்தை இந்த சிறுமி மீது திணிப்பதாகக் குறிப்பிட்டு கமெண்ட் செய்துள்ளனர்


Also Read : "நீங்கள் சாகும் காலம் வந்துவிட்டது... நான் உங்களை கொல்லப்போகிறேன்" பேய் புகுந்த வீட்டிற்குள் இருந்து வந்த சத்தம்...! அடுத்தடுத்து நடந்த திகில் சம்பவங்கள்...!

இந்த வீடியோ பேஸ்புக்கில் சுமார் 14 மில்லியன் பார்வைகளையும், 3.81 லட்சம் லைக்குகளையும், 1.30 லட்சம் ஷேர்களையும் பெற்றுள்ளது. 18 ஆயிரம் பேர் இந்த பதிவில் கமெண்ட் செய்துள்ளனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்.

அடுத்த செய்தி