ஆப்நகரம்

தற்கொலை செய்யப்போவதாக வீடியோ போட்டு மிரட்டிய காரைக்குடி பெண்ணிற்கு நூதன தண்டனை வழங்கிய கோர்ட்

காரைக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது குறித்து விசாரித்த கோர்ட் அந்த பெண்ணிற்கு நூதன தண்டனை ஒன்றை வழங்கியுள்ளது.

Samayam Tamil 11 Jul 2019, 5:57 pm
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கார்த்திகா, இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் தன்னிடம் சக ஊழியர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும், அதனால் தான் விஷம் அருந்தவுள்ளதாகவும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது பெரும் வைரலாக பரவியது.
Samayam Tamil தற்கொலை செய்யப்போவதாக வீடியோ போட்டு மிரட்டிய காரைக்குடி பெண்ணிற்கு நூதன தண்டனை வழங்கிய கோர்ட்


அந்த பெண் அழுது கொண்டே இதை கூறியிருந்தார். பலர் இந்த வீடியோக்களை வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகிய தளங்களில் பகிர்ந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது அவர் வேலை செய்த நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாகவும், எனவே தான் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதில்லை எனவும் அவர் அடுத்த நாளே ஒரு வீடியோவை வெளியிட்டார். இது பெரும் விவகாரமாக வெடித்தது.

இதையடுத்து இது குறித்து விசாரிக்க தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, காரைக்குடி குற்றவியல் நீதிமன்றத்திற்கு இது குறித்து விசாரிக்க ஆணையிட்டது.

விசாரணை நடத்திய நீதிபதி, கார்த்திகாவை எச்சரித்தார். மேலும் அவர் செய்ததவறுக்கு அவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என வித்தியாசமான ஒரு தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.

தற்கொலை செய்து கொள்ளபோகிறேன் என மிரட்டல் விடுத்த பெண்ணிற்கு தற்கொலைக்கு முயன்றவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க வேண்டும் என விடுக்க வேண்டும் என்ற உத்தரவு பெரும் விவகாரத்தை ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி