ஆப்நகரம்

snake skin : புராணக்கதைகளில் வரும் 7 தலை பாம்பு இன்றும் வாழ்கிறதா?- வைரலாகும் வீடியோ

கர்நாடக மாநிலத்தில் 7 தலை பாம்புபின் தோற்றம் கொண்டதாக ஒரு பாம்பு சட்டையை பார்த்த மக்கள் 7 தலை பாம்பு அவர்கள் கிராமத்தில் இன்றும் உயிர் வாழ்வதாக நம்பி வருகின்றனர்.

Samayam Tamil 11 Oct 2019, 10:44 am
கர்நாடக மாநிலம் மரிகவுடனா டோடி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமப் பகுதியில் மக்கள் ஏழு தலை கொண்ட பாம்பு வாழ்ந்து வருவதாக நம்புகின்றனர். அந்த பாம்பை அவர்கள் கடவுளாகவும் வழிபடுகின்றனர்.
Samayam Tamil புராணக்கதைகளில் வரும் 7 தலை பாம்பு இன்றும் வாழ்கிறதா


இந்நிலையில் கடந்த புதன்கிழமை அந்த கிராமத்தில் உள்ள கோயிலில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் அந்த கோவிலைச் சுத்தம் செய்த போது கோவிலின் அருகே இரந்த பாலப்பா என்பவருக்குச் சொந்தமான வயலில் பாம்பு தோல் ஒன்று கிடப்பதைக் கண்டார்.

Also Read : இரண்டே பேர் தான் முன்பதிவு செய்ததால் ரத்து செய்யப்பட்ட ரயில்

அந்த தோலைப் பார்த்தபோது அதில் ஏழு தலைகள் இருந்தன. இதைப் பார்த்ததும் ஆச்சரியமடைந்த அந்த கோவில் ஊழியர் அந்த ஊர் மக்களுக்கு இது குறித்துத் தெரிவித்தார். இதனால் ஊரே பரபரப்பாகி அந்தப்பாம்புச் சட்டையைப் பார்க்க பாலப்பாவின் நிலத்தில் ஊர் மக்களே கூடி விட்டனர்.


Also Read : மகனுக்கு "தல அஜித்" மகளுக்கு "அஜித்தா" என பெயர் வைத்த நடிகர் அஜித் ரசிகர்...!

தற்போது இந்த பாம்பு குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் "புராணக் கதைகளிலிருந்த பாம்பு தற்போதும் உயிருடன் உள்ளது." எனப் பரப்பி வருகின்றனர்.

அடுத்த செய்தி