ஆப்நகரம்

உங்க பாஸ்போர்ட் விர்ஜினா இருக்குதா? அதுக்கு இப்படி ஒரு நிலைமை கூட வரலாம்...!

இந்தியாவில் உள்ள அம்மாக்களுக்கு என்ற இருக்கும் பழக்கங்களில் முக்கியமான ஒன்று சேமிப்பு. இது பல வகைகளில் சிறப்பானதாக இருந்தாலும், சில நேரங்களில் விபரீதமாக மாறிவிடுகிறது.

Samayam Tamil 29 Mar 2019, 4:15 pm
இந்தியாவில் உள்ள அம்மாக்களுக்கு என்ற இருக்கும் பழக்கங்களில் முக்கியமான ஒன்று சேமிப்பு. இது பல வகைகளில் சிறப்பானதாக இருந்தாலும், சில நேரங்களில் விபரீதமாக மாறிவிடுகிறது.
Samayam Tamil பலசரக்கு லிஸ்ட் எழுத பாஸ்போர்ட் தான் கிடைத்ததா


நம்ம அம்மாக்களை போன்ற சேமிப்பு சிந்தனைகளை எல்லாம் நாம் கற்பனையில் கூட நினைத்துப்பார்க்க முடியாது. உதாரணமாக வீட்டில் உள்ள பிளாஸ்டிக் கவர்களை சேமிக்க ஒரு பெரிய பிளாஸ்டிக் கவர் வைத்து அதில் மற்ற பிளாஸ்டிக் கவர்களை சேமிப்பார்கள், வீட்டு விசேஷங்களுக்கு வரும் பரிசுகளின் வரும் பரிசு பொருள் கவர்களை பத்திரமாக வைத்து நாம் யாருக்காவது பரிசு வழங்கும் போது அதை பயன்படுத்தி அனுப்புவது உள்ளிட்ட பல வித்தியாசமான பழக்கம் எல்லாம் நம் அம்மாக்களுக்கு இருக்கும்.
Read More :சென்னை காதலனை காண இலங்கையில் இருந்து ஓடி வந்த பெண்... அடுத்து நடந்த அதிர்ச்சி...!


இதே போல ஒரு அம்மா செய்த காரியம் தற்போது வைரல் செய்தியாக மாறியுள்ளது. கேரளாவை சேர்ந்த ஒரு தாய் தனது கணவரின் பழைய பாஸ்போர்ட்டில் போன் நம்பர் குறிப்புகளையும், பலசரக்கு பொருள் லிஸ்ட்களையும், எழுதி வைத்துள்ளார்.

இதை புகைப்படத்தை அவரது மகன் தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டார். தற்போது அது பெரும் வைரலாக மாறி வருகிறது.
Read More: குழந்தைகள் பெற்றுக்கொள்ள தடை...! குலதெய்வ கோபத்தால் புதிய சட்டம் போட்ட கிராமம்...!

இவர் எழுதியது பழைய பாஸ்போர்ட் தான் என்றாலும், புதிய பாஸ்போர்ட் வாங்க பழைய பாஸ்போர்ட் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி