ஆப்நகரம்

ஒரே நாளில் ₹1 கோடி சம்பாதித்த கட்டிட தொழிலாளி

கேரளாவில் உள்ள கட்டிட தொழிலாளி ஒருவருக்கு லாட்டரியில் ரூ 1 கோடி பரிசு விழுந்துள்ளது

Samayam Tamil 21 Jan 2020, 2:07 pm
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் தஜ்முல்ஹக் 34 வயதான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவிற்காகப் பிழைப்பு தேடி வந்தார். கேரளாவில் இவர் கட்டிடத்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
Samayam Tamil Kerala Lottery


இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள அரசாங்கத்தின் காருண்யா என்ற லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். அந்த லாட்டுக்கான பரிசு முடிவுகள் வந்ததும் அதில் வந்த ரூ1 கோடி பரிசுக்கான லாட்டரி எண்ணும், இவர் வாங்கிய லாட்டரி சீட்டின் எண்ணும் ஒரே மாதிரியாக இருந்துள்ளது. அதைச் சரி பார்த்து உறுதி செய்த இவர் நேரடியாக அருகிலுள்ள காவல்துறை நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

Also Read : பூமியிலிருந்து 35 அடி உயரத்திலிருந்த நிலா... பரபரப்பான அறிவியல் உண்மைகள்

அங்குச் சென்று அவர் தன்னிடம் உள்ள லாட்டரி சீட்டிற்கு ரூ1 கோடி பரிசு விழுந்துள்ளது. இந்த செய்தியைக் கேட்டு விட்டு யாராவது என்னை அடித்துவிட்டு லாட்டரி சீட்டை பிடுங்கிச் செல்லக்கூடும் என்பதால் பணத்தை பெரும் வரை பாதுகாப்பு தரும்படி கேட்டுள்ளார்.

அதன் படி போலீசாரும் அவருடன் உரிய வங்கி வரை சென்று பணம் பெறும்வரை பாதுகாப்பு வழங்கினர். தற்போது தஜ்முல்ஹக் இதுநாள் வரை தான் பட்ட துன்பங்களுக்கு ஒரு விடை கிடைத்துவிட்டதாகவும், இனி தன் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் எனவும் பேட்டியளித்துள்ளார்.

அடுத்த செய்தி