ஆப்நகரம்

"தாக்குதலின் போது என்னுடன் போனில் பேசி கொண்டிருந்தார்..!" சிஆர்பிஎஃப் வீரர் மனைவியின் கண்ணீர் பேட்டி..!

புல்வாமாவில் வீரமரணமடைந்த வீரர் பிரதீப் சிங்கின் மனைவி பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது தாக்குதலின் போது பிரதீப் சிங் தன்னுடன் போனில் பேசிக்கொண்டிருந்ததாகவும். தாக்குதலின் சத்தத்தை தான் கேட்டதாகவும் கூறியுள்ளார். இது பலரை கண்கலங்க வைத்த பேட்டியாகவுள்ளது.

Samayam Tamil 19 Feb 2019, 4:17 pm
கடந்த பிப். 14ம் தேதி காஷ்மீரில் புல்வாமாவில் தீவிரவாதிகள் மிக கொடுரமான வகையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற கான்வாயில் தற்கொலை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 பேர் வீரமரணமடந்தனர்.
Samayam Tamil தாக்குதலின் போது என்னுடன் போனில் பேசி கொண்டிருந்தார், குண்டு வெடிக்கும் சத்தம் எனக்கு கேட்டது..! சிஆர்பிஎஃப் வீரர் மனைவியின் கண்ணீர் பேட்டி..!


இந்த 44 பேரில் ஓவர் தான் உ.பி மாநிலம், கன்னூஜ் மாவட்டத்தை சேர்ந்த அஜன் சுஷன்பூர் கிராமத்தை சேர்ந்த பிரதீப் சிங் இவருக்கு திருமணமாகி 2 பெண்குழந்தைகள் உள்ளனர்.

சம்பவம் நடந்தபோது அவரது மனைவி தனது தாய் வீடான கான்பூரில் இருந்துள்ளார். இந்த நிகழ்வு கூறித்து அவர் கூறும் போது : "நான் கடந்த 14ம் தேதி எனது கணவருடன் போனில் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது. அவர் பயணத்தில் இருப்பதால் அதிக நேரம் இருக்கிறது அதனால் அதிக நேரம் பேச முடியும் என கூறினார். நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்தோம்.

Read more: உலகின் சிறந்த டாய்லெட் பேப்பராக மாறிய பாக்., தேசிய கொடி...!

பேசும் போது அதிகமாக எங்களது இரண்டாவது மகள் சேனா குறித்து தான் கேட்டு கொண்டிருந்தார். அப்பொழுது திடீர் என பெரிய சத்தம் ஒன்று கேட்டது. அதன் பின் எந்த சத்தமும் இல்லை. சில நொடிகளில் போன்காலும் துண்டிக்கப்பட்டு விட்டது. எனக்கு எதுவும் புரியவில்லை இதற்கு முன்னர் இப்படி நடந்ததும் இல்லை. இதை என் வீட்டாரிடம் சொல்லி ஏன் இப்படி நடந்தது என குழப்பி போய் இருந்தேன்.

Read More: "சுதந்திர போராளிகள் நடத்திய தாக்குதல்" என செய்தி வெளியிட்ட பாக்., ஊடகம்

அவருக்கு ஏதும் ஆகியிருக்குமோ என்ற பயம் என்னை தொற்றிக்கொண்டது. அவரை மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் கால் கனெக்ட் ஆகவில்லை. அதன் பின் அவர் இறந்த செய்தி தான் கேட்டேன்" என் சொல்லிக்கொண்ட அழுது விட்டார்.

Read More: ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் இதுவரை இந்தியாவில் எத்தனை தாக்குதல் நடத்தியுள்ளது தெரியுமா?

இந்த சம்பவம் பலரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி