ஆப்நகரம்

டேலண்ட் எல்லாம் ஒண்ணுமில்ல.. 'கிருபை இந்தியன்ஸ்' Mumbai Indians அணியை வெச்சு செய்யும் Troll Video!

கிருபை பாடலை வைத்து மும்பை இந்தியன்ஸ் அணியை டிரால் செய்யும் வீடியோ, வைரல்!

Samayam Tamil 14 Oct 2020, 4:28 pm
பாஸ்டர் டார்வின் எபநேசர் என்பவற்றின் யூடியூப் சேனலில் ஏறத்தாழ 6 ஆண்டுகளுக்கு முன், வெளியான கிறிஸ்துவ பக்தி பாடல் கிருபை, கிருபை பாடல். இந்த பாடல் தான் இப்போது இன்டர்நெட்டில் வைரலாக மாறியுள்ளது. இந்த பாடலில் டேலண்ட் ஏதும் இல்ல, ஆனாலும் நான் வாழுறேன், எல்லாத்துக்கும் ஆண்டவரின் கிருபை தான் காரணம் என்று பொருள் படும்படியான பாடல் வரிகள் இடப்பெற்றுள்ளன.
Samayam Tamil latest troll trend kirubai song mumbai indians version goes viral on internet
டேலண்ட் எல்லாம் ஒண்ணுமில்ல.. 'கிருபை இந்தியன்ஸ்' Mumbai Indians அணியை வெச்சு செய்யும் Troll Video!


இந்த பாடல் வரிகளை கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை நையாண்டி செய்து மீம்கள் போட்டு உலாவவிட்டனர் மீம்ஸ் க்ரியேட்டர்கள். உடனே, இது ஒரு மாபெரும் மீம் டெம்ப்ளேட்டாகவே மாறிவிட்டது. இஷ்டத்துக்கு கேலி, கிண்டல்களுடன் மீம்கள், மீம் பாடல்கள் என தங்கள் கிரியேட்டிவ் திறன்களை மீம் மன்னர்கள் காண்பிக்க துவங்கினார்கள்.

சென்னையில் துவங்கி, இப்போது மும்பை வரை நீண்ட பெரும் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது இந்த கிருபை பாடல் மீம் வெரைட்டிகள். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஏதோ ஒரு வெற்றி பார்ட்டி கொண்டாட்டம் போல தெரிகிறது அந்த வீடியோ. வீடியோவில் மும்பை இந்தியன்ஸ் அணியின் எல்லா வீரர்களும் தோன்றுகிறார்கள்.

கிருபை, கிருபை பாடலில் வரும் காட்சி போலவே, "டேலண்ட் இல்ல, ஆனாலும் வாழுறேன் நான், எல்லாம் கிருபை, கிருபை" வரி ஒலிக்கும் போது, ரோஹித் ஷர்மா நடனமாடும் வீடியோவுடன் பிரமாதமாக எடிட் செய்து உலாவவிட்டுள்ளனர். அந்த வீடியோ ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் என எல்லா சோஷியல் மீடியாவிலும் பரவி வருகிறது.

கிருபை இந்தியன்ஸ் டிரால் வீடியோ:

இந்த விடியோவின் கீழே, மும்பை இந்தியன்ஸ் அணியை கிருபை இந்தியன்ஸ் அணி என்றும் சிலர் கேலி செய்து வருகிறார்கள்.

விளையாட்டில் அனைவருமே போராடி தான் வெற்றி காண்கிறார்கள். ஆனால், ரசிகர்கள் தங்கள் அணி வென்றால் அது வீரம் என்றும், பிற அணிகள் வென்றால் அதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என கருதுவது, கருத்திவிடுவது தவறு.

முக்கியமாக மும்பை இந்தியன்ஸ் அணி மீது பரவலாக வைக்கப்படும் குற்றச்சாட்டு இது, மும்பை இந்தியன்ஸ் அணியில் மட்டும் தான் அம்பயர்களும் சேர்ந்து விளையாடி வெற்றிப் பெற உதவுகிறார்கள் என கேலி செய்யப்படுகிறது.

அதே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் தான், இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஓப்பனிங் பேஸ்ட்மேன் என்பதை இந்த ஐபிஎல் சீசனில் மட்டும் கஜினி சஞ்சய் ராமசாமி போல சிலர் மறந்துவிடுவது, கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது.

கேலி, கிண்டல் இருக்கலாம், அது எக்காரணத்தாலும், எக்காலத்திலும் வீரர்களின் மனதை புண்படுத்தி விடக்கூடாது.

அடுத்த செய்தி