ஆப்நகரம்

வீட்டிற்குள் புகுந்து நாயை தூக்கி சென்ற சிறுத்தை - வைரலாகும் வீடியோ

கர்நாடகா மாநிலத்தில் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று நாயை தூக்கி செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 17 Sep 2019, 3:07 pm

கர்நாடகா மாநிலம் சிவ்மோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி என்ற பகுதி துங்கா நதிக்கரை பகுதியில் அமைந்திருக்கிறது. இது மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாக இருப்பதால் இப்பகுதியில் அடிக்கடி வன விலங்குகளின் நடமாட்டம் காணப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் வன விலங்குகள் இரை தேடி ஊருக்குள் வந்து ஊரில் உள்ள விலங்குகளை கொன்றுவிடும், சில நேரங்களில் தூக்கிச் செல்லும்.
Samayam Tamil leopard enters the house in shivamogga at karnataka and picks the dogs there video gone viral
வீட்டிற்குள் புகுந்து நாயை தூக்கி சென்ற சிறுத்தை - வைரலாகும் வீடியோ


இப்படியாக அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று புகுந்து அந்த வீட்டில் காவலுக்கு இருந்த நாயைக் கவ்வி சென்றது. இந்த காட்சிகள் முழுவதும் அந்த வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

வைஃபை சிக்னல் குறைந்தால் என்ன ஆகும் தெரியுமா? வைரலாகும் மீம்ஸ்



இந்த காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சிறுத்தை ஒன்று வீட்டின் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி வீட்டிற்குள் வந்து வீட்டில் உள்ள நாயைத் தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அடுத்த செய்தி