ஆப்நகரம்

ஒரு ஆண்டாக ஒரு பைசா கூட கொடுக்காமல் கேஎஃப்சியில் வெளுத்துக்கட்டிய பலே வாலிபர்

ஏமாற்றுபவர்கள் பல விதமாக யோசித்து பல யுக்திகளை கையாண்டு ஏமாறுபவர்கள் தான் ஏமாற்றப்படுகிறோம் என்பது தெரியாமலேயே அழகாக அவர்களை ஏமாற்றிவிடுவார்கள்.

Samayam Tamil 14 May 2019, 6:37 pm
ஏமாற்றுபவர்கள் பல விதமாக யோசித்து பல யுக்திகளை கையாண்டு ஏமாறுபவர்கள் தான் ஏமாற்றப்படுகிறோம் என்பது தெரியாமலேயே அழகாக அவர்களை ஏமாற்றிவிடுவார்கள்.
Samayam Tamil ஒரு ஆண்டாக ஒரு பைசா கூட கொடுக்காமல் கேஎஃப்சியில் வெளுத்துக்கட்டிய பலே வாலிபர்


தென்னாப்ரிக்காவில் ஒருவர் இப்படியாக கடந்த 1 ஆண்டாக பலரை ஒரே பொய்யின் மூலம் ஏமாற்றியுள்ளார். அங்குள்ள ஒரு பல்கலையில் படிக்கும் மாணவரான இவரின் பெயர் வெளியாகவில்லை.

இவர் தினமும் கேஎஃப்சியில் சாப்பிட வேண்டும் என விரும்பினார். இதனால் தினமும் இவர் அருகில் உள்ள கேஎஃப்சி கடைக்கு சென்று தான் உணவு தர சோதனை செய்யும் துறையில் பணியாற்றும் அதிகாரி என்றும் தான் உணவில் உள்ள தரத்தை சோதனை செய்ய வந்துள்ளதாகவும் கூறி தினமும் ஒவ்வொரு கடைக்கு சென்று சாப்பிட்டுள்ளார்.

இப்படியே கடந்த 1 வருடம் தனது சாப்பாட்டை கேஎஃப்சி உணவகத்திலேயே கழித்துள்ளார். இது குறித்து சந்தேகம் ஏற்பட்டு அவர் குறித்து விசாரித்த போது தான் அவர் ஏமாற்றியது தெரியவந்தது.

அதன் பின் அவர் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த செய்தி வெளியானது குறித்து சமூகவலைதளங்களில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் சிலவற்றை கீழே காணுங்கள்.

அடுத்த செய்தி