ஆப்நகரம்

Micropenis: கணவரின் ஆண்குறி சிறிதாக இருக்கிறது என டாக்டரிடம் சொன்ன மனைவி மீது வழக்கு..!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு தம்பதி சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இவ்வாறு காதலில் இருக்கும் தம்பதிகளுக்கு இடையே செக்ஸ் உறவு சாதாரணம் தான் என்றாலும் இவர்கள் இருவரும் அதில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது.

Samayam Tamil 15 Mar 2019, 3:45 pm
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு தம்பதி சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இவ்வாறு காதலில் இருக்கும் தம்பதிகளுக்கு இடையே செக்ஸ் உறவு சாதாரணம் தான் என்றாலும் இவர்கள் இருவரும் அதில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது.
Samayam Tamil கணவரின் ஆண்குறி சிறிதாக இருக்கிறது


இந்நிலையில் இவர்களுக்கு திருமணமானது. முதல் இரவின் போது தான் மனைவிக்கு தன் கணவரின் ஆண்குறி சிறிதாக இருப்பதை தெரிந்து கொண்டார். அதன் பின் தான் காதலித்த போது இருவரும் செக்ஸ் உறவில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படாதவாறு இவர் தவிர்த்துக்கொண்டதும் தெரியவந்தது.
Read More: கேஸ் வேண்டாம், நெருப்பு வேண்டாம்.. சுட சுட தோசை ரெடி...!

இதன் பின் செய்வது அறியாது திகைத்த மனைவி தனது கணவரின் ஆண்குறி பிரச்னை குறித்து டாக்டரிடம் செல்ல தன் கணவரிடம் கேட்டார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மனைவி மட்டும் தனியாக சென்று டாக்டரை சந்தித்து இதற்கான தீர்வு குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் எப்படியோ கணவருக்கு தெரிந்து விட இந்த விவகாரம் இருவருக்கும் இடையே பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது.
Read More: பேஸ்புக் மார்க்கிற்கு மீம்ஸால் மார்க் போட்ட நம்ம நெட்டிசன்ஸ்..!

கணவர் கோர்ட்டில் "தான் மனைவி தன் அனுமதியில்லாமல் தனது ஆண்குறி குறித்து டாக்டரிடம் ஆலோசனை நடத்தினார்" என புகார் தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது இந்த விவகாரத்தில் உள்ள தம்பதிகளின் பெயர் மற்றும் அடையாளங்கள் வெளியே வரவில்லை. தற்போது இருவரும் சேர்ந்துதான் வாழ்ந்து வருகின்றனர்.

அடுத்த செய்தி