ஆப்நகரம்

மாப்பிள்ளை பார்த்துத்தராத மேட்ரிமோனி இணையதளத்திற்கு ரூ62 ஆயிரம் அபராதம்

சண்டிகர் மாநிலத்தை சேர்ந்தவர் தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து தராத மேட்ரிமோனி இணையதளத்தின் மீது வழக்கு தொடர்ந்தால் ரூ62 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Oct 2019, 10:05 am
சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர பால் சிங், இவரது மகள் அம்மாநிலத்தில் அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2017ம் ஆண்டு மேட்ரிமோனி இணையதளம் ஒன்றில் தன் மகளுக்கு டாக்டர் மாப்பிள்ளையை பார்க்கவேண்டும் எனப் பதிவு செய்து வைத்திருந்தார்.
Samayam Tamil மேட்ரிமோனி இணையதளத்திற்கு ரூ62 ஆயிரம் அபராதம்


அதற்காக அந்த இணையதளத்தின் ராயல்பேக்கேஜ் உறுப்பினராகச் சேர்ந்தார். அதற்காக ரூ 50,000 பணமும் செலுத்தியுள்ளார். அந்த இணையதளம் 9 மாதங்களில் 18க்கும் அதிகமான வரன்களைச் சுரேந்திர பாலிற்கு அனுப்பியுள்ளார். ஆனால் அதில் எதுவுமே பொருத்தமான மாப்பிள்ளையாக இல்லை.

Also Read : குழந்தையின் அருகில் படுத்திருந்த பேய்...! சிசிடிவி காட்சியை பார்த்து திகிலான தாய் என்ன செய்தார் தெரியுமா?

இந்நிலையில் நீண்ட காலம் காத்திருந்தும் தன் மகளுக்குத் திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைக்காத விரக்தியில் சுரேந்திரபால் அந்த மேட்ரிமோனி இணையதளத்தின்மீது நுகர்வோர் அமைப்பிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகார் அவர் உறுப்பினர் கட்டணமாகச் செலுத்திய ரூ50,000 பணம் அதற்கு ஆண்டிற்கு 9 சதவீதம் வட்டி ஆகியவற்றைச் சேர்த்துத் திரும்பத் தர வேண்டும் என கோரியிருந்தார்.

Also Read : 90 ஸ் கிட்ஸ்களின் தீபாவளி எப்படி இருந்தது தெரியுமா? ஞாபகம் வருதே மீம்ஸ்

இந்த புகார் குறித்து விசாரித்த நுகர்வோர் அமைப்பு மேட்ரிமோனி நிறுவனத்திற்கு ரூ62 ஆயிரம் அபராதம் விதித்தது. இது சேவை கட்டணம், வட்டி வழக்கிற்கான செலவு, அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.

அடுத்த செய்தி