ஆப்நகரம்

ஐபிஎல் பைனலில் ரோஹித் சர்மா அவுட் ஆனதுக்கு காரணம் என்ன தெரியுமா?

இந்தாண்டு மக்கள் பெரிதும் எதிர்பார்த்த ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டி கடந்த ஞாயிறு அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன் அணிக்கும் இடையே நடந்தது.

Samayam Tamil 14 May 2019, 4:30 pm
இந்தாண்டு மக்கள் பெரிதும் எதிர்பார்த்த ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டி கடந்த ஞாயிறு அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன் அணிக்கும் இடையே நடந்தது.
Samayam Tamil ஐபிஎல் பைனலில் ரோஹித் சர்மா அவுட் ஆனதுக்கு காரணம் என்ன தெரியுமா


இந்த போட்டியை கோடி கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ரோஹித் சர்மா, டி-காக் ஆகியோர் துவக்கத்தில் களம் இறங்கினர்.

போட்டியின் இரண்டாவது ஓவரில் ரோஹித் சர்மா பந்தை சிக்சருக்கு விரட்டினார். அப்பொழுது பந்து ரசிகர்கள் வசம் சென்றது. பொதுவாக ரசிகர்கள் வசம் பந்து சென்றால் அந்த பகுதியில் பாதுகாப்பிற்காக நிற்பவர்கள் பந்தை எடுத்து வீரர்களிடம் கொடுத்துவிடுவார்கள்.

ஆனல் இந்த முறை ரோஹித் சர்மா அடித்து ரசிகர்கள் பக்கம் சென்ற பந்தை காணவில்லை யாரோ ஒரு ரசிகர் அந்த பந்தை எடுத்து தன்னிடம் வைத்துக்கொண்டார்.

இதனால் வேறு வழியில்லாமல் அம்பயர்கள் புதிய பந்தை எடுத்து விளையாடினர். புதிய பந்து என்பதால் பந்து அழகாக ஸ்விங் ஆகியது. இதனால் ரோஹித் சர்மா வெறும் 15 ரன்னிலேயே ஆட்டமிழந்தார்.

தற்போது சமூகவலைதளங்களில் ரோஹித் சர்மா அடித்த பந்தை எடுத்து சென்றவர் சென்னை அணியில் ரசிகர் தான் எனவும் அதனால் தான் ரோஹித் சர்மா சரியாக விளையாடவில்லை என பலர் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி