ஆப்நகரம்

பைக்கில் வந்து குழந்தையை கடத்திய குரங்கு - வைரல் வீடியோ

குரங்கு ஒன்று பைக்கில் வந்து சிறுமியை கடத்தி சென்ற சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

Samayam Tamil 5 May 2020, 10:52 am
இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். இந்த வீடியோவில் குரங்கு ஒன்று ஒரு குட்டி பைக்கை ஓட்டி வந்து அங்கிருந்த ஒரு சிறுமியை தரதரவென இழுத்து சென்று மீண்டும் விட்டுவிட்டது. நல்லவேளையாக அந்த சிறுமிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதை வீடியோவை அவர் குரங்கின் கடத்தல் முயற்சி என பதிவு செய்துள்ளார்.
Samayam Tamil monkey kidnap



இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து கருத்திட்டு வருகின்றனர். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி