ஆப்நகரம்

வீட்டில் சண்டை போடுவதற்கு சம்பளத்துடன் லீவு...! வருகிறது புதிய சட்டம்

வீட்டில் சண்டை போடுவதற்காக ஆண்டிற்கு 10 நாட்கள் விடுமுறை வழங்கியுள்ளது நியூசிலாந்து அரசு.

Samayam Tamil 17 Jul 2019, 7:27 pm
வீட்டில் சண்டை போடுவதற்காக ஆண்டிற்கு 10 நாள் விடுமுறை அறிவித்துள்ளது நியூசிலாந்து அரசு. அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பனர் ஜான் லோகி கடந்த 7 ஆண்டுகளாக குடும்பத்தில் சண்டை போட்டு பிரிந்து செல்பவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை விட வேண்டும் என போராடி வந்துள்ளார்.
Samayam Tamil வீட்டில் சண்டை போடுவதற்கு சம்பளத்துடன் லீவு


சமீபத்தில் அவர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் அந்த தீர்மானத்தை முன் மொழிந்தார். அதற்காக 63 பேர் ஆதரவும், 57 பேர் எதிர்ப்பையும் பதிவு செய்தனர். பெரும்பாலானோர் அதற்கு ஆதரவு அளித்தால் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

இதனால் குடும்ப சண்டையில் பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னையும் தன் குழந்தைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி தன் கடமைகளை முடித்து ஆரோக்கியமான மனநிலையுடன் வேலைக்கு திரும்புவதற்கு இந்த சட்டம் வழிவகுத்துள்ளது.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர் பணியாற்றும் நிறுவனம் அவருக்கு துணைநின்று அவர் பிரச்னை தீரும் வரை 10 நாள் சம்பளத்துடன் விடுப்பு மற்றும் அவர் பணிக்கு திரும்பியதும் இரண்டு மாத காலம் அவரின் வசதிக்கு தகுந்தபடி பணி நேரங்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதன் மூலம் உலகத்தில் குடும்ப சண்டையில் பாதிக்கப்படுபவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு தரும் முதல் நாடு என்ற அந்தஸ்தை நியூசிலாந்து பெற்றுள்ளது.

அடுத்த செய்தி