ஆப்நகரம்

இன்று தேர்வாகும் எம்பிகளுக்கு மோடி வைத்த பெரிய ஆப்பு...! 5 ஸ்டார் விடுதியில் தங்க அனுமதியில்லை...!

மக்களவை தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்படுகிறது எந்தெந்த தொகுதிக்கு யார் யார் மக்களவை உறுப்பினர் என்பது இன்று உறுதியாகும்.

Samayam Tamil 23 May 2019, 2:42 pm
மக்களவை தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்படுகிறது எந்தெந்த தொகுதிக்கு யார் யார் மக்களவை உறுப்பினர் என்பது இன்று உறுதியாகும்.
Samayam Tamil இன்று தேர்வாகும் எம்பிகளுக்கு மோடி வைத்த பெரிய ஆப்பு


பொதுவாக மக்களவை உறுப்பினர்களுக்கு டில்லியில் அரசு தங்குவதற்கு வீடு வழங்கும் ஏற்கனவே அவர் மக்களவை உறுப்பினராக இருந்து மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அவருக்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த வீடே தொடரும் புதிதாக வருபவர்களுக்கு புதிய வீடுகள் அல்லது எம்பிகள் காலி செய்து செல்லும் வீடுகள் வழங்கப்படும்.

கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் புதிதாக மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் அவர்களுக்கு வழங்க வீடுகள் இல்லை தோல்வியடைந்தவர்கள் வீடுகளை காலி செய்து தர சில நாட்களாகும். இதனால் வேறு வழியில்லாமல் பல எம்பிக்கள் சில அவர்களுக்கு வீடு வழங்கும் வரை 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இதற்காக லோகசபா மன்றம் ஒவ்வொரு எம்பிக்கும் ஒவ்வொரு நாளுக்கு ரூ9 ஆயிரம் முதல் ரூ10 ஆயிரம் வரை செலவு செய்தது. இவ்வாறு கடந்த முறை ஹோட்டலில் எம்பிக்கள் தங்கியதற்காக மட்டுமே ரூ30 கோடி செலவானது.

இதையடுத்து சுதாரித்துக்கொண்ட லோக்சபா மன்றம் எம்பிக்கள் தங்குவதற்காக ரூ35 கோடி செலவில் புதிய வீடுகளை கட்டிவிட்டது. புதிதாக 350 அறைகள் கொண்ட வீடுகளில் 162 எம்பிகள் தங்க முடியும். மேலும் 391 கார்களை நிறுத்தவும் இடம் உள்ளது.

இந்நிலையில் இந்த முறை எத்தனை புதிய எம்பிக்கள் வந்தாலும் அவர்களுக்கு முதல் நாளே வீடு ஒதுக்கப்பட்டு விடும். இதனால் இந்த முறை தேர்வாகும் எம்பிக்கள் 5 நட்சத்திர ஹோட்டலில் சொகுசாக தங்க இந்த முறை வாய்ப்பில்லை.

அடுத்த செய்தி