ஆப்நகரம்

வடகொரியாவில் தீ விபத்திலிருந்து குழந்தைகளை காப்பாற்றிய பெண்ணிற்கு தண்டனை ஏன் தெரியுமா? -

வட கொரியாவில் தீ விபத்திலிருந்து குழந்தைகளை காப்பாற்றிய பெண்ணின் மீது விசாரணை நடந்துவருகிறது. இது குறித்து கீழே முழு லிங்கில் காணுங்கள்.

Samayam Tamil 11 Jan 2020, 3:48 pm
வடகொரியா நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன். அந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவரது வீட்டிலும் கிம் ஜாங் உன் புகைப்படத்தை வைத்திருப்பது. கட்டாயம். அதை அரசாங்க அதிகாரிகள் வந்து சோதனை செய்வார்கள். அதைப் பின்பற்றாத மக்களுக்கு கடும் நடவடிக்கைகள் வழங்கப்படும்.
Samayam Tamil kim jong un


இந்நிலையில் சமீபத்தில் வடகொரியா நாட்டில் உள்ள ஒரு வீட்டில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடக்கும் போது வீட்டில் குழந்தைகள் மட்டுமே இருந்தனர். விபத்து குறித்து கேள்விப்பட்டதும் பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்பொழுது அந்த குழந்தைகளின் தாய் தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்டார்.

இந்நிலையில் செய்தி வைரலாக பரவியது. ஆனால் அந்த தாய் மீது தற்போது அரசு விசாரணை நடந்து வருகிறது. ஏன் தெரியுமா? வடகொரிய அரசு விதிப்படி கிம் ஜாங் உன் புகைப்படத்தை வீட்டில் வைக்க வேண்டும் அந்த புகைப்படம் தீயில் எரிந்துள்ளது. தன் குழந்தைகளைக் காத்த அந்த தாய் கிம் ஜாங் உன் புகைப்படத்தைக் காப்பாற்றவில்லை. என்பதால் அவர் மீது விசாரணை நடந்து வருகிறது.

Also Read : "எனக்கு திருமணமாகி 10 வயதில் குழந்தை இருக்கிறது" 4 வயது சிறுமியின் பகீர் வாக்குமூலம்... இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தீராத மர்மம்

விசாரணையில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும்
எனத் தெரிகிறது. தீ விபத்தில் சிக்கிய தன் குழந்தைகளைக் காப்பாற்றிய தாய்க்கு கிம் ஜாங் உன் புகைப்படத்தை காப்பாற்றாததற்காகத் தண்டனை வழங்கவுள்ள செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி