ஆப்நகரம்

இறந்து போனவர் இறுதிச் சடங்கில் உயிர் பிழைத்த அதிசயம்...! எப்படி சாத்தியமானது தெரியுமா?

ஓடிசா மாநிலத்தில் இறந்து போன ஒருவர் உயிருடன் எழுந்து வந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இறுதி சடங்கின் போது அவர் தலையை அங்கும் இங்கும் அசைத்ததை பார்த்து சுற்றி இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

Samayam Tamil 14 Oct 2019, 11:38 am
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்திலுள்ள பகல்லா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சிமானச் மாலிக், 55 வயதாக இவர் ஆடுமாடுகளை மேய்த்துவருகிறார்.
Samayam Tamil இறந்து உயிர் பிழைத்தவர்


நேற்று முன் தினம் இவர் வழக்கம் போல ஆடு மேய்க்கச் சென்றவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் தேடிப் பார்க்கும்போது அவர் ஆடு மேய்க்கும் பகுதியில் விழுந்து கிடந்தார்

அவர் இறந்துவிட்டதாக நினைத்து அவருக்கான இறுதிச் சடங்குகள் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டது. கடைசியாக அவரை தூக்கி மயானத்திற்குக் கொண்டு சென்று இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருக்கும்போது மாலிக் தன் தலையை அங்கும் இங்கு அசைத்துள்ளார்.

Also Read : 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் திரும்ப கிடைத்த அதிசயம்

அதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் பயந்து அலறியடித்து ஓடினர். சிலர் அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு டாக்டர்கள் அளித்த சிகிச்சையில் அவர் தற்போது எழுந்து உட்கார்ந்துவிட்டார். டாக்டர்கள் இது குறித்துக் கூறும்போது அவர் கடுமையான காய்ச்சலால் தான் மயங்கி விழுந்துள்ளார். இவர் இறந்துவிட்டார் என தவறாக நினைத்து இதைச் செய்துவிட்டனர். நல்லவேளையாக அவர் உடலில் இறுதி நேரத்திலாவது அசைவு இருந்தது. எனக் கூறினர். இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி