ஆப்நகரம்

லாரியில் சென்ற 1.36 லட்சம் முட்டைகள் நடுரோட்டிலேயே ஆஃப்பாயிலானது

அமெரிக்காவில் லாரியில் சுமார் 1.36 லட்சம் முட்டைகளை டெலிவரிக்காக லாரியில் எடுத்து செல்லும் போது அது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 27 Sep 2019, 3:41 pm

நீங்கள் ஜிம்மிற்கு போய் தினமும் உடற்பயிற்சி செய்து கட்டுமஸ்தான உடலைப் பெற ப்ரோட்டினற்காக தினமும் முட்டை சாப்பிடுபவரா? இந்த செய்தியை நீங்கள் படிக்காதீர்கள் மனசு ஒடிந்து போவீர்கள்.
Samayam Tamil லாரியில் சென்ற 1.36 லட்சம் முட்டைகள் நடுரோட்டிலேயே ஆஃப்பாயிலானது


அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் மைல்ஸ் என்ற 66 வயது முதியவர் லாரியில் சுமார் 11,340 டஜன் முட்டைகள் அதாவது 1,36,080 முட்டைகளை ஒரு லாரியின் ஏற்றிக்கொண்டு வேறு இடத்திற்கு டெலிவரி செய்யச் சென்று கொண்டிருந்தார்.

சாலை எண் 125ல் அவர் வேகமாகச் சென்று கொண்டிருக்கும்போது முட்டைகள் அடுக்கவைக்கப்பட்ட ட்ரக்கில் இருந்து முட்டைகள் எல்லாம் ரோட்டில் விழுந்து உடைந்து போனது.

Also Read : கேன்சர் நோயாளிகளுக்காக முடியை தானம் வழங்கிய கேரள பெண் போலீஸ்க்கு குவியும் பாராட்டுகள்

ஆம் அவர் கொண்டு சென்ற 1.36 லட்சம் முட்டையும் ரோட்டிலேயே ஆஃப்பாயிலானது. ஆனால் இதில் அதை விடச் சோகமான விஷயம் என்னவென்றால் அந்த டிரக்கை ஓட்டி சென்ற மைல்ஸ்க்கு முட்டை ரோட்டில் விழுந்ததே தெரியாது. அவர் தொடர்ந்து டிரக்கை ஓட்டிச்சென்று கொண்டே இருந்தார்.

Also Read : கூகுளைப் பற்றிய இந்த ரகசியங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரியாது..! நீங்களும் ரசிகயமாக வைத்துக்கொள்ளுங்கள்

சுமார் 1 லட்சம் முட்டைகள் ரோட்டில்விழுந்த நிலையில் அப்பகுதியை போலீசார் விபத்து நடந்த பகுதியாக அறிவித்து பாதையை மாற்றி விட்டுள்ளனர். சுமார் 1.36 லட்சம் முட்டைகள் ரோட்டில் விழுந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி