ஆப்நகரம்

Thalapathy vijay : ஸ்கிரினை கிழிப்பேன் என ட்விட்டரில் மிரட்டிய ரசிகரை வேட்டியை கிழிச்சிடுவோம் என பங்கமாக கலாய்த்த திரையரங்கம்

ட்வீட்டரில் ஸ்கிரினை கிழித்துவிடுவேன் என மிரட்டிய ரசிகருக்கு வடிவேலு வேட்டியை கழிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பங்கமாக கலாய்த்துள்ளது.

Samayam Tamil 24 Oct 2019, 10:47 am
தீபாவளியை முன்னிட்டு தமிழ் சினிமாவில் பிகில் மற்றும் கைதி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகுகிறது. இந்த திரைப்படங்கள் குறித்துத் தான் சமூகவலைத்தளங்களில் அதிகமாக தற்போது பேசப்படுகிறது.
Samayam Tamil ரசிகரை வேட்டியை கழிச்சிடுவோம் என பங்கமாக கலாய்த்த திரையரங்கம்



Also Read : அட யாருடா இவன் என்னை மாதிரியே இருக்கான்? - வைரலாகும் வீடியோ

இந்நிலையில் பிஎஸ்எஸ் மல்டிபிளக்ஸ் என்ற திரையரங்கம் தனது ட்வீட்டர் பதிவிலிருந்து ஸ்கிரீனை கிழிப்போம் என மிரட்டிய ரசிகரைப் பங்கமாகக் கலாய்த்துள்ளது. இந்த ட்வீட்டர் திரெட் தற்போது வைரலாக பரவி வருகிறது.


Also Read : இந்தியாவின் சின்ன வயது சிரியல் கில்லர் பற்றி தெரியுமா? அதிர வைக்கும் அதிர்ச்சி தகவல்கள்

பிஎஸ்எஸ் திரையரங்க ஹேண்டிலில் கைதி படம் குறித்து வெளியிட்ட ஒரு ட்வீட்டில் அஜித் ரசிகர் ஒருவர் வந்து ஸ்கிரின் கிழிந்துவிடும் என கமெண்ட் செய்த போது அதற்குப் பதிலளிக்கும் வகையில் வடிவேலுவின் வேட்டியைக் கிழிக்கும் ஒரு காமெடியின் ஸ்கிரின் ஷாட்களை பதிவிட்டிருந்தது. இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது. இருந்தாலும் இந்த பிஎஸ்எஸ் மல்டிபிளக்ஸ் என்ற பெயரில் இருக்கும் கணக்கில் வெரிபை செய்யப்படவில்லை. அதனால உண்மையில் அந்த திரையங்கம் நடத்தும் ட்வீட்டர் பக்கம் இது தானா இல்லையா என்ற உண்மையான தகவல் தெரியவில்லை.

அடுத்த செய்தி