ஆப்நகரம்

ராகுல் காந்தி என்ற பெயரால் வங்கி கடன் மறுப்பு...! சிம் கார்டும் கிடைக்கவில்லையாம்....!

இந்தூரை சேர்ந்த ராகுல்காந்தி என்பவருக்கு அந்த பெயர் காரணமாகவே வங்கி கடன் மற்றும் சிம் கார்டு மறுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 31 Jul 2019, 8:41 pm
நாம் சிறுவயதில் நம்முடன் படித்த நண்பனின் பெயர் ஏதாவது பிரபலமானவர்களின் பெயராக இருந்தால் அவனை கிண்டல் செய்து கொண்டே இருப்போம். ஆனால் அது சிறு வயதில் வளர்ந்த பின்பு அது எல்லாம் இல்லாம் சாதாரணமாகிவிடும்.
Samayam Tamil ராகுல் காந்தி


ஆனால் இங்கு ஒருவருக்கு வளர்ந்த பின்பு அவரது பெயரால் அவர் ஒரு சிம்கார்டு கூட வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார் அவரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கப்போகிறோம்.

மத்தியபிரேதச மாநிலம் இந்தூரை சேர்ந்த 22 வயது இளைஞர் ராகுல் காந்தி, ஆம் அவரது முழு பெயரே ராகுல் காந்திதான். இந்த பெயர் தான் இவருக்கு பிரச்சனையே. காங்., தலைவர் பெயரும் ராகுல் காந்தி, இவரது பெயரும் ராகுல் காந்தி என்பதால் இவர் பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்.

இந்த பெயரால் இவருக்கு எந்த செல்போன் நிறுவனமும் சிம்கார்டு வழங்க மறுத்துவிட்டதாம். மேலும் எந்த வங்கியும் இந்த பெயர் காரணமாவே இவருக்கு லோன் தர மறுத்துவிட்டதாம். இந்த பெயரால் இவர் பல சிக்கல்களை சந்தித்துள்ளார்.
Read More: தமிழகத்தில் இந்த கிராமத்திற்கு மட்டும் இலவசமாக 24 மணி நேரமும் குடிநீர்; தண்ணீர் பஞ்சமே இல்லையாம்...!


இது குறித்து ராகுல் காந்தி கூறும்போது : "என் பெயர் ராகுல் தான் என் தந்தை பெயர் ராஜேஷ் மால்வியா, இவர் பிஎஸ்எஃப்பில் பணியாற்றியதால் இவருக்கு காந்திய என்ற பட்ட பெயர் உண்டு அதை அவர் தனது பெயருடன் இணைத்துக்கொண்டார். அதனால் எனக்கு ராகுல் காந்தி என்ற பெயர் வந்துவிட்டது.

நான் ஆதார் கார்டு வைத்திருக்கிறேன். ஆனால் அது ஏன் இருக்கிறது என்றே தெரியவில்லை எங்கு கொடுத்தாலும் இந்த பெயர் காரணமாகவே செல்லாமல் போய்விடுகிறது. எனக்கு சிம்கார்டு, வங்கி கடன் என எதுவுமே கிடைக்கவில்லை. தற்போது நான் பயன்படுத்தும் எண் எனது சகோதரர் பெயரில் வாங்கியது தான்.
Read More: Sunny Leone போன் நம்பர் என்ன தெரியுமா?

இது மட்டுமல்ல நான் என்னை தெரியாத ஒரு நபருக்கு போன் செய்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டால் அவர்கள் என் பெயரை கேட்டதும் ஏதோ ஏமாற்றுகாரர் போல எண்ணுகிறார்கள். சிலர் கிண்டல் செய்துவிட்டு போனை கட் செய்துவிடுவார்கள்" என கூறினார்.

இவர் தற்போது தனது பெயரில் உள்ள காந்தி என்ற பெயரை நீக்கிவிட்டு ராகுல் மால்வியா என மாற்ற திட்டமிட்டு வருகிறார்.

அடுத்த செய்தி