ஆப்நகரம்

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவத் தயார் - இலங்கை இஸ்லாமிய அமைப்பு

'முஸ்லீம் கவுன்சில் ஆஃப் ஸ்ரீலங்கா' அமைப்பு தலைவர் குண்டுவெடிப்புக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயார் என்றுள்ளார்.

Samayam Tamil 21 Apr 2019, 3:39 pm
குண்டு வெடிப்பைத் தொடர்ந்து வாட்சாப், வைபர் உள்ளிட்ட தளங்கள் தடைசெய்யப்பட்டு உள்ளன என வதந்தி பரப்படுகிறது. இது முற்றிலும் பொய். இந்த குண்டு வெடிப்பு குறித்து ஏப்., 11ம் தேதி காவல் உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
Samayam Tamil 190421 NE Colombo Church explosion4


இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன

இலங்கை குண்டுவெடிப்புக்கான பின்னணியை கண்டறிய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி என்ன என்பது பற்றி துரித விசாரணை நடைபெறுகிறது விசாரணைக்கு ஒட்டுமொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - இலங்கை அதிபர் அலுவலகம்.

'முஸ்லீம் கவுன்சில் ஆஃப் ஸ்ரீலங்கா' அமைப்பு தலைவர் குண்டுவெடிப்புக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயார் என்றுள்ளார்.

இலங்கை குண்டு வெடிப்பில் சிக்கி 160 பேர் உயிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியிள்ளது.

இலங்கையில் நட்சத்திர ஹோட்டல், தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் காலை 8.45 மணி அளவில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. ஈஸ்டர் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. கொழும்பு கொச்சிடை அந்தோணியார், கட்டான கட்டுவப்பட்டி தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையின் போது குண்டுகள் வெடித்தன. இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த பலர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது வரை குண்டு வெடிப்பில் சிக்கி 160 பேர் உயிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியிள்ளது. பலர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. வெளிநாட்டைச் சேர்ந்த 9 பேர் இறந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறை அளிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடங்களில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து வாட்சாப், வைபர் உள்ளிட்ட தளங்கள் தடைசெய்யப்பட்டு உள்ளன என வதந்தி பரப்படுகிறது. இது முற்றிலும் பொய்.
இந்த குண்டு வெடிப்பு குறித்து ஏப்., 11ம் தேதி காவல் உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளது தெரியவந்துள்ளது. முஸ்லீம் கவுன்சில் ஆஃப் ஸ்ரீலங்கா அமைப்பு தலைவர் குண்டுவெடிப்புக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயார் என்றுள்ளார்.

அடுத்த செய்தி