ஆப்நகரம்

நேர்கொண்ட பார்வை படம் பார்க்க லீவ் கேட்ட கல்லூரி மாணவர் - வைரலாகும் லீவ் லெட்டர்

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை பார்க்க லீவ் கேட்ட கல்லூரி மாணவரின் லீவ் லெட்டர் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 8 Aug 2019, 3:28 pm
நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம். இந்த திரைப்படம் இந்தியில் வெளியான பிங்க் திரைப்படத்தின் ரீமேக் தான்.
Samayam Tamil Nerkonda Paarvai படம் பார்க்க லீவ் கேட்ட கல்லூரி மாணவர்


இந்த திரைப்படத்திற்காக நேற்று இரவு முதலே தமிழ் சினிமா ரசிகர்களே திருவிழாவாக கொண்டாட துவங்கிவிட்டனர். பலர் அதிகாலை முதல் தியேட்டரில் போய் படம் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சமூகவலைதளங்களில் நாகபட்டிணம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் படம் பார்ப்பதற்காக இன்று விடுமுறை வேண்டும் என தான் பயிலும் துறை தலைவருக்கு லீவு லெட்டர் ஒன்றை எழுதியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
Read More: #என்தல_அத்திவரதரு அஜித் ரசிகரை டிரெண்ட் செய்த விஜய் ரசிகர்கள்...!

அவர் அவர் தான் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை பார்க்க போவதால் தனக்கு விடுமுறை வேண்டும் என எழுதியுள்ளார். இந்த புகைப்படம் பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி