ஆப்நகரம்

Tamil Nadu Cop: வன்முறை செய்ய முன்றவர்களை தெறிக்க விட்ட எஸ்ஐ ; "ரியல் சிங்கம்" போல சவால்

சபரிமலை விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய போது கேரள பஸ் டிரைவரை தாக்க முயன்று வன்முறை செய்தவர்களை எஸ்ஐ ஒருவர் தெறிக்கவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Samayam Tamil 5 Jan 2019, 2:50 pm
சபரிமலையில் கடந்த ஜன. 2ம் தேதி அதிகாலை சுமார் 40 வயதுடைய 2 பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 50 வயதிற்கு கீழான பெண்கள் சுவாமி தரிசனம் செய்வதை அனுமதிக்ககூடாது என ஐயப்ப பக்தர்கள் கூறி வரும் நிலையில் இது இந்து சமயத்தை சார்ந்தவர்களை கொந்தளிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.
Samayam Tamil kaliyakkavilai si


இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் பா.ஜ. சார்பில் கேரள அரசை எதிர்த்து ஆர்பாட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் போது அந்த வழியாக கேரள மாநில அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

இதை பார்த்த போராட்டகாரர்கள் இந்த பஸ்சை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டு பஸ்சின் டிரைவரை தாக்க முயன்றனர். முன்னதாக அமைதியான முறையில் ஆர்பாட்டம் நடத்த முன்னதாகவே போலிசில் முன் அனுமதி வாங்கியிருந்ததால் அங்கு பாதுகாப்பிற்காக எஸ்ஐ மோகன் என்பவர் தலைமையில் சில போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

நிலைமையை உணர்ந்த உடனடியாக பஸ்சை அந்த பகுதியில் இருந்து வெளியே செய்து விட்டு பஸ்சை தாக்க முயன்றவர்களை பார்த்து சினிமா பாணியில் "ஒரு ஆம்பிளயாக இருந்தால் பஸ்சை தொட்டு பாரு" என சவால் விட்டார். அதன் பின்பு அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த வீடியோ இணைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாக பரவி வருகிறுது. பலர் எஸ்ஐ மோகனை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி