ஆப்நகரம்

அரசு பேருந்தில் அனுமன் அடையாளம் - வைரலாகும் புகைப்படம்

தமிழ் நாடு அரசு பேருந்து ஒன்றில் இந்து மத கடவுள் அனுமன் உருவம் ஸ்டிக்கராக ஒட்டப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Samayam Tamil 15 Oct 2019, 10:38 am
இந்து மத நம்பிக்கை கொண்டவர்களில் சிலர் தங்கள் வாகனங்களில் அனுமன் புகைப்படத்தை ஒட்டுவது தற்போது பேஷனாகிவிட்டது. இந்த புகைப்படம் ஒட்டும் பழக்கம் இந்தியா முழுவதும் சமீப காலத்தில் பரவி வருகிறது.
Samayam Tamil அரசு பேருந்தில் அனுமன் அடையாளம்


இந்நிலையில் தற்போது அரசு பேருந்தில் இந்த புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு என்பது பொது வாகனம் என்பதால் அதில் குறிப்பிட்ட ஜாதி, மத அடையாளங்கள் இருக்கக் கூடாது எனவும், ஆனால் வைரலாகி வரும் புகைப்படத்தில் அனுமன் படம் போடப்பட்டு ஜெய் அனுமன் என எழுதப்பட்டுள்ளதாகவும் பலர் குறிப்பிட்டு சமூகவலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

Also Read : பைக்கில் குழந்தைகளுடன் சென்ற நபருக்கு அபராதம் - வைரலாகும் வீடியோ


Also Read : ஜீப்பில் இருந்து தவறி விழுந்தது பேயா? குழந்தையா? - நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

இந்த புகைப்படத்தில் உள்ள பஸ் நெல்லை மாவட்டம் தென்காசியிலிருந்து சென்னை வந்த பஸ் எனவும். இந்த புகைப்படம் வைரலாவது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்குச் சிலர் புகார் அளித்ததன் பேரில் இந்த புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் தற்போது அகற்றப்பட்டதாகத் தெரிகிறது.

அடுத்த செய்தி