ஆப்நகரம்

காண்பவர் உள்ளங்களை கலங்க வைத்த யானை..! - வைரலாகும் புகைப்படம்...!

இலங்கையில் உள்ள ஒரு யானையின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 16 Aug 2019, 6:46 pm
இலங்கையில் உள்ள கண்டி பகுதியில் ஆண்டுதோறும் ஈசாலா பெரஹேரா என்ற திருவிழா கொண்டாடப்படும். பத்து நாட்கள் நடக்கும் இந்த விழாவில் கடந்த 5ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிந்தது.
Samayam Tamil காண்பவர் உள்ளங்களை கலங்க வைத்த யானை


இந்த திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட யானைகளும், 200க்கும் அதிகமாகக் கலைஞர்கள் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற யானைகளில் 70 வயதான டிக்கிரி என்ற பெண் யானையும் ஒன்று இந்த யானையின் புகைப்படத்தை "Save Elephant" என்ற அமைப்பு தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

யானையைப் பிரம்மாண்டமாகவும், குண்டாகவும் பார்த்து ரசித்தவர்கள் எல்லாம் இந்த மெலிந்த உருவத்துடனான யானையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த புகைப்படத்தைப் பதிவிட்ட Save Elephant அமைப்பு தங்கள் பதிவில் : "டிக்கிரிக்கு உடல் நிலை சரியில்லை. திருவிழாவில் பங்கேற்கும் யானைகளில் டிக்கிரி தினமும் மாலை நேரத்தில் பேரணியில் இணைந்து நள்ளிரவு தான் மீண்டும் தன் இடத்திற்குத் திரும்புகிறது. எலும்பும் தோலுமாக டிக்கிரியின் நிலை மிக மோசமாகவுள்ளது.

இதை பொருட்படுத்தல் தொடர்ந்து பக்கிரியைத் திருவிழாக்களில் பயன்படுத்தி வருகின்றனர். அங்கு மக்களின் கூச்சல், புகை, பட்டாசு, ஆகிய இடைஞ்சல்கள் அதிகமாக உள்ளது. இதனால் டிக்கிரி மிகவும் கஷ்டப்படுகிறது." என பதிவிட்டுள்ளனர். தற்போது டிக்கிரியின் புகைப்படம் மிக வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.

அடுத்த செய்தி