ஆப்நகரம்

Raris உலகின் முதல் தங்க ஏடிஎம் கார்டு...! விலையை கேட்டால் தலை சுற்றும்...

பிரிட்டனில் உள்ள ஒரு நிறுவனம் உலகின் முதல் ஏடிஎம் கார்டை வெளியிட்டுள்ளது. இதன் மதிப்பு என்ன அப்படி இதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது கீழே படியுங்கள்.

Samayam Tamil 25 Oct 2019, 10:36 am
பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தி ராயல் மிண்ட் நிறுவனம் உலகின் முதல் தங்க ஏடிஎம் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. 18 கேரட் தங்கத்தால் ஆன இந்த கார்டிற்கு ராரிஸ் என அந்நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது.
Samayam Tamil உலகின் முதல் தங்க ஏடிஎம் கார்டு


இந்த கார்டில் வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் கையொப்பமிடப்படும் என்றும், இந்த கார்டை உலகில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் அதற்கு பரிவர்த்தனை கட்டணங்கள் எதுவும் இல்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Also Read : மாப்பிள்ளை பார்த்துத்தராத மேட்ரிமோனி இணையதளத்திற்கு ரூ62 ஆயிரம் அபராதம்

வெளிநாடுகளில் இந்த கார்டை பயன்படுத்தினாலும் அதற்கு அந்நிய செலாவணி கட்டணமும் கிடையாது என்றும், இந்த கார்டு ஆடம்பர கட்டண அட்டைகளின் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த கார்டை எல்லா வாடிக்கையாளர்களும் வாங்க முடியாது. குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை அந்நிறுவனமே தேர்ந்தெடுத்து வழங்கவுள்ளது. இந்த கார்டை வாங்கி 18,750 யூரோ இந்திய மதிப்பில் ரூ 14.7 லட்சம் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Also Read : குழந்தையின் அருகில் படுத்திருந்த பேய்...! சிசிடிவி காட்சியை பார்த்து திகிலான தாய் என்ன செய்தார் தெரியுமா?


Also Read : 90 ஸ் கிட்ஸ்களின் தீபாவளி எப்படி இருந்தது தெரியுமா? ஞாபகம் வருதே மீம்ஸ்

தங்க கார்டில் தங்கள் பெயர் மற்றும் கையொப்பம் இருப்பதாலும், அதில் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் கிடையாது என்பதாலும் மக்கள் இந்த கார்டை பெற பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி