ஆப்நகரம்

"திருட வரவங்களுக்கு கொஞ்சம் பணம் வச்சிட்டு போங்க..!" லெட்டர் எழுதி வச்ச திருடன்

கேரளாவில் திருடன் ஒருவன் திருட வந்த வீட்டில் திருட நகை, பணம் இல்லாததால் அவர் வீட்டு ஓனருக்கு கடிதம் எழுதி வைத்து சென்ற விவகாரம் பெரும் அளவிற்கு வைரலாகியுள்ளது.

Samayam Tamil 5 Aug 2019, 4:58 pm
கேரளாவில் உள்ள மக்கள் எல்லா விதத்திலும் சற்று வித்தியாசமாக சிந்திக்ககூடியவர்கள் அவர்கள் மத்தியில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் வைரலாக பரவி வருகிறது.
Samayam Tamil திருட வரவங்களுக்கு கொஞ்சம் பணம் வச்சிட்டு போங்க


கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் ஒரு வீட்டில் 50 பவுன் நகை கொள்ளையடித்து வந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி மொட்ட ஜோஸ். இவரை பிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணைகளை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மொட்ட ஜோஸ் 50 பவுன் நகையை திருடிய பகுதியில் வேறு ஒரு வீட்டிற்குள் திருடுவதற்காக புகுந்துள்ளான். ஏற்கனவே திருட்டு நடந்ததால் அந்த பகுதியில் மொட்ட ஜோஸை பிடிக்க போலீசார் தீவிரமான கண்காணிப்பில் வேறு இருந்தனர்.
Read More: ஹெல்மெட் அணியாதவர்களுக்கு லட்டு வழங்கிய போலீஸ்..! என்ன காரணம் தெரியுமா?

மொட்ட ஜோஸ் இரண்டாவதாக சென்ற வீட்டில் யாரும் இல்லை. போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு சாவகாசமாக வீட்டிற்குள் புகுந்துவிட்டான். ஆளில்லா வீட்டில் நகை, பணம் என எதுவும் இல்லை வெறும் வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்கள் மட்டும் இருந்துள்ளது.

இதனால் மொட்ட ஜோஸ் வெறுப்படைந்தார். அப்பொழுது அவருக்கு ஒரு ஐடியா கிடைத்தது. தன்னை வெளியில் போலீஸ் தேடுவதால் தான் தினமும் தங்கிக்கொள்ள அந்த வீட்டை பயன்படுத்த எண்ணினான். அதன்படி தினமும் மாறுவேடம் அணிந்து அந்த வீட்டை தனது சொந்த வீட்டை போல பயன்படுத்தினான்.
Read More: "உயிரை பயணம் வைத்து திருட வந்தா காசு வைக்கமாட்டியா?" திருட சென்ற இடத்தில் கடிதம் எழுதி வைத்த திருடன்

போலீசாருக்கு தினமும் ஒருவர் மாறுவேடம் அணிந்து செல்வது குறித்து தகவல் கிடைத்தது. இதனால் அவனை பிடித்து விசாரிக்க முடிவு செய்தனர். அப்பொழுது மொட்டஜோஸ் மாறுவேடத்துடன் ஆளில்லாத அந்த வீட்டில் இருந்து வெளியேறியபோது போலீசாரிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டான்.

அவர் அந்த வீட்டில் என்ன செய்தான் என பார்த்தபோது அவன் அந்த வீட்டில் வீட்டு ஓனர்களுக்கு "அடுத்த முறை நீங்கள் வெளியூருக்கு செல்லும்போது திருட வருபவர்கள் திருடிக்கொண்டு போக கொஞ்சம் பணம், நகையாவது வைத்துவிட்டு போங்கள். " என கடிதம் எழுதி வைத்துள்ளதை கண்டு பிடித்தனர்.
Read More: விமானத்தில் இந்த பெண் செய்த செயலை பார்த்தீர்களா?- குபீர் சிரிப்பை கிளப்பும் வைரல் வீடியோ

இதையடுத்து மொட்ட ஜோஸ் மீது பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவனை கைது செய்தனர். சமீபத்தில் நெய்வேலியில் இதே போல மளிகை கடையில் ஒருவர் இதேபோல கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற விவகாரமும் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி