ஆப்நகரம்

வெளியூரில் இருந்து நாய்களுக்கு ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த நபர்..! - குவியும் பாராட்டுகள்

கேரளாவை சேர்ந்த ஒருவர் தான் வளர்க்கும் நாய் உட்பட தன் தெருவில் உள்ள நாய்களுக்கு ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து வாங்கிய விவகாரம் தற்போது பெரும் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 26 Sep 2019, 1:24 pm
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வர்க்கீஸ் உம்மன். இவர் வசிக்கும் வீட்டில் ஒரு நாயை வளர்த்து வருகிறார். தினமும் அந்த நாய்க்கு மட்டுமல்லாமல் அவரது தெருவில் உள்ள மற்ற நாய்களுக்கு அவரே உணவளித்து வளர்த்து வருகிறார்.
Samayam Tamil வெளியூரில் இருந்து நாய்களுக்கு ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த நபர்


இவர் நாய்களுக்கு உணவளிப்பது இவரது வீட்டாருக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் இவர் தொடர்ந்து தனது நாய்க்கும் மற்ற தெரு நாய்க்கும் உணவளித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் திடீரென குடும்பத்துடன் வெளியூர் செல்ல வேண்டிய நிலை வந்தது. அப்பொழுது அவர் தன் நாய்களுக்கு எப்படி உணவளிப்பது என யோசித்தார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த வழிதான் ஆன்லைன் உணவு டெலிவரி ஆப்

Also Read : மஞ்சள் மலைபாம்புடன் கொஞ்சி விளையாடும் சிறுமி - வைரலாகும் வீடியோ

அவர் வெளியூர் சென்றாலும், சரியான நேரத்தில் தனது செல்போனில் ஆன்லைன் மூலம் உணவகங்களில் உணவுகளை ஆர்டர் செய்வார். உணவு வந்ததும் அதை டெலிவரி செய்பவரிடம் அதை தன் வீட்டின் முன்பு வைத்துவிட்டுச் செல்லும்படி சொல்லுவார்.

அவர்கள் சென்றதும் தன் வீட்டு காவலாளிக்கு போன் செய்து அந்த உணவை நாய்க்கு வழங்கச் சொல்லுவார். இது அவரது நாய்க்கு மட்டுமல்லாமல் அந்த தெருவில் உள்ள எல்லா நாய்களுக்கும் இவ்வாறே உணவு வழங்கியுள்ளார்.

Also Read : ஸ்டைல் காட்டி உயிரை விட பார்த்த இளைஞர்...! ரயில்வே போலீசாரால் உயிர்தப்பினார் - வைரலாகும் வீடியோ

தான் ஊரில் இல்லாவிட்டாலும் தான் வளர்க்கும் நாய் மட்டுமல்லாது, தனது தெருவில் உள்ள நாய்களுக்கும் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து கொடுத்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி