ஆப்நகரம்

வயதாக வயதாக உயரம் குறையும் பாட்டி...

கான்பூர் அருகே ஒரு பாட்டிக்கு வயதாக வயதாக வளர்ச்சி குறைகிறதாம்.

Samayam Tamil 11 May 2020, 5:03 pm
நமக்கு நாளாக ஆக ஆளும் அறிவும் வளர்ந்து கொண்டே போகும். சிறு வயதில் நாம் இருந்த உயரத்தில் தற்போது இருக்க மாட்டோம். ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து கொண்டே தான் இருப்போம். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்பு வளர்ச்சி என்பது இல்லாமல் பல ஆண்டுகளாக ஒரே வளர்ச்சியில் இருப்போம். ஆனால் எந்த காரணத்தை கொண்டும் வளர்ச்சி குறைய மாட்டோம்.
Samayam Tamil height paati


சில நேரங்களில் நாம் வித்தியாசமான மனிதர்களை பற்றி படித்திருப்போம். ஒட்டிப்பிறந்த இரட்டை பிறவிகள், அதிகமாக முடி வளரும் குழந்தை, மண்டை ஓடே இல்லாமல்பிறந்த குழந்தை என பார்த்திருப்போம் ஆனால் வயதாக வயதாக வளர்ச்சி குறையும் குபெண்ணை பார்த்திருக்கீறீர்களா?

கான்பூரை சேர்ந்த தாரு என்ற கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி தேவி 60 வயதாகமு் இவர் கடந்த 25 ஆண்டுகளாக ஆண்டிற்க ஆண்டு உயரம் குறைந்து கொண்டே செல்கிறார். ஒரு விபத்திற்கு பின்புதான் சாந்தி தேவியின் உயரம் குறைந்து கொண்டே வர துவங்கியுள்ளது. தற்போது சாந்தி தேவி வெறும் 2 அடி மட்டுமே உள்ளார்.


25 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தங்கியிருந்த ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சாந்தி தேவி காயமடைந்தார். அப்பொழுது அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். சிகிச்சை முடிந்து வீடடு திரும்பியதும் சில நாட்களில் சாந்தி தேவியின் ஒட்டு மொத்த உடலும் வலி எடுத்துள்ளது. இதையடுத்து அவரது மகன் அவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளார். அங்கு டாக்டர் மருந்து கொடுத்துள்ளார். அதன் பின்பு இவரது உயரம் குறைந்துள்ளது.

அதன் பின்பு 4 மாதங்களின் அவரது உயரம் சுமார் .5 அடி குறைந்துவிட்டது. அதன் பின் அவர் பல டாக்டர்களை பார்த்தும் அவரால் அந்த உயரம் குறைந்த பிரச்சினையிலிருந்து மீண்டு வர முடியவில்லை. 5 அடி உயரம் இருந்த சாந்தி தேவி தற்போது வெறும் 2 அடி உயரம் மட்டுமே இருக்கிறார். கேட்கவே ஆச்சிரியமாக இருக்கிறது அல்லவா?

அடுத்த செய்தி