ஆப்நகரம்

Modi , Kohli -யை எல்லாம் அடிச்சி தூக்கி இந்தியாவில் முதலிடத்தில் அமர்ந்த தல அஜித்...!

டுவிட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் #Viswasam என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

Samayam Tamil 24 Aug 2019, 9:51 am

2019ம் ஆண்டு இந்தியாவின் மிக முக்கியமான ஒரு ஆண்டு இந்த ஆண்டு இந்திய பாராளுமன்ற தேர்தல், உலககோப்பை கிரிக்கெட் என பல முக்கியமான விஷயங்கள் எல்லாம் நடந்தது.
Samayam Tamil Modi  Kohli யை எல்லாம் அடிச்சி தூக்கி இந்தியாவில் முதலிடத்தில் அமர்ந்த தல அஜித்


இந்நிலையில் டுவிட்டர் நிறுவனம் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட முதல் 5 ஹேஷ்டேக்கின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

அதன் படி 5 வது இடத்தை #NewProfilePic என்ற ஹேஷ்டேக்கும், #Maharshi என்ற ஹேஷ்டேக் 4வது இடத்தையும், #CWC19 என்ற ஹேஷ்டேக் 3வது இடத்தையும், #LokSabhaElections2019 என்ற ஹேஷ்டேக் 2வது இடத்தையும் பிடித்துள்ளது.

இன்னும் இந்த சுவர் எத்தனை பொண்ணுங்களை காவு வாங்கப்போவுதோ? - தெறிக்கவிடும் மீம்ஸ்


இதில் யாரும் எதிர்பாராத வகையில் #Viswasam என்ற ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தாண்டு இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்தமக்களும் பேசிய விஷயம் தேர்தலும் உலககோப்பை கிரிக்கெட்டும் தான் ஆனால் அதை யும் தாண்டி இந்தாண்டு விஸ்வாசம் படம் பேசப்பட்டிருக்கிறது என்ற விஷயம் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பலூன் உடைத்தே பிரபலமான மனிதர்...! என்ன வீடியோ பாத்தீங்களா?

இதனால் தற்போது அஜித் ரசிகர்கள் குஷியில் இருந்து வருகின்றனர். அஜித் ரசிகர்கள் இன்று விவேகம் திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் நிலையில் விஸ்வாசம் குறித்த செய்தி அவர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி