ஆப்நகரம்

டிக்டாக்கில் வீடியோ போட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்; ஏன் தெரியுமா?

டில்லியில் ஹனிசிங் பாடலுக்கு வீடியோ எடுத்து டிக்டாக்கில் வெளியிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 1 Apr 2019, 4:55 pm
டில்லியை சேர்ந்த ஷாஸாடா பர்வேஸ்(24) மற்றும் மோனு (23) இவர்கள் இருவரும் சமீபத்தில் நடந்த ஒரு பார்ட்டியில், பார்ட்டி உடையில் ஹனி சிங்கின் ஒரு பாடலுக்கு கையில் துப்பாக்கியுடன் பாடலுக்கு ஏற்றார் போல நடந்து வந்து வந்து வாய் அசைத்து பின்ணியில் டிக்டாக் ஆப் மூலம் அந்த பாடலை இணைத்து வெளியிட்டனர்.
Samayam Tamil டிக்டாக்கில் வீடியோ போட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்


இந்த வீடியோ வைரலாக பரவ துவங்கியது. பலர் இந்த வீடியோவை ஷேர் செய்தனர். இந்நிலையில் இந்த வீடியோவில் அவர்கள் பயன்படுத்தியது ஒரிஜினல் துப்பாக்கி என கூறப்பட்டது.
Read More: மீம் கிரியேட்டர்களுக்கு தயாரான பணம் தான் வேலூரில் சிக்கியதா?

இது குறித்து விசாரித்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில் அது ஒரிஜினல் நாட்டு துப்பாக்கி தான் என தெரியவந்தது. இதையடுத்து அந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூகவலைதளங்களில் துப்பாக்கி உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்ட ஆயுதங்களை கொண்டு வீடியோ எடுத்து வெளியிட்டதால் இவர் கைது செய்யப்பட்ட செய்தி வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி