ஆப்நகரம்

சிப்ஸ் பாக்கெட் உள்ள சிப்ஸ்க்கு பதிலாக இதுவா இருந்தது? என்னது இது?

உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் சிப்ஸ்க்கு பதிலாக முழு உருளைக்கிழங்கு இருந்தது இந்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த முழு தகவல்களை கீழே காணுங்கள்

Samayam Tamil 20 Oct 2021, 11:09 am

ஹைலைட்ஸ்:

  • உருளைகிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் விநோதம்
  • சிப்ஸ்க்கு பதிலாக முழு உருளை கிழங்கு இருந்தது.
  • இந்த புகைப்படம் ட்விட்டரில் செம வைரல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Kettle Chips Potato Chips
நீங்கள் எல்லோரும் கடையில் சென்று சிப்ஸ் பாக்கெட் வாங்கினீர்கள் என்றால் அதில் பெரும்பாலும் காற்று தான் இருக்கும். மிக குறைவாகவே சிப்ஸ் இருக்கும். இந்த சிப்ஸ் எல்லாம் உருளைக்கிழங்கில் தான் செய்கிறார்கள் என நமக்கு தெரியும். இப்படியா சிப்ஸ் பாக்கெட்களை நீங்கள் வாங்கும் போது சிப்ஸிற்கு பதிலாக முழு உருளைக்கிழங்கே இருந்தால் எப்படி இருக்கும்? அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

பெட்டில் படுத்து நெட்பிளிக்ஸ் பார்க்க ரூ24 லட்சம் சம்பளம்...
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் டாக்டர் டேவிட் பாய்ஸி, இவர் சமீபத்தில் சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அதில் சிப்ஸ்க்கு பதிலாக முழு உருளைக்கிழங்கு இருந்துள்ளது. இதை கண்டதும் அதிர்ச்சியடைந்த அவர் அதை தது ட்விட்டரில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த ட்வீட் வைரலான நிலையில் பலர் இதை பகிர்ந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த சிப்ஸ் நிறுவனம் இது எப்படி நடந்தது என தெரியவில்லை. அதனால் இது குறித்து எங்களுக்கு தனிப்பட்ட செய்தியை அனுப்புங்கள் நாங்கள் எங்கு தவறு நடந்தது என பார்க்கிறோம் என பதிலளித்துள்ளனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

அடுத்த செய்தி