9 மணி நேரத்தில் 51 பப்பிற்கு சென்று ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். அதுவும் ஒரு சொட்டு கூட "சரக்கு" குடிக்காமல் இந்த சாதனையை செய்துள்ளார்.
அதன்படி அவர் ஒரு பப்பிற்கு சென்றால் குறைந்தபட்சம் 125 மில்லி லிட்டர் குடிக்கவேண்டும் நீர் ஆகாரம் எது வேண்டுமானாலும் குடிக்கலாம் என்ற ரிதியில் இதை செய்தார். இவர் ஒவ்வொரு பப்பபாக சென்று ஆரஞ்சு ஜூஸ், டயட் கோட் என பின்ட் பீர் என குடித்தார். இப்படியாக இவர் 8 மணி நேரம் 52 நிமிடம் 37 நொடியில் 51 பப்களுக்கு விசிட் அடித்துள்ளார்.
இது உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. பலர் இது குறித்து சமூகவலைத்தளங்களில் பேசி வருகின்றனர். 48 வயதான மட் எல்லீஸ் பப்களுக்கு செல்வதில் அலாதி பிரியம் கொண்டவர் இவர் இந்த சாதனையை செய்துள்ளது. பலரை வியக்க வைத்துள்ளது. இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெ்டில் சொல்லுங்கள்