ஆப்நகரம்

அவெஞ்சர்ஸ் வடிவேலு வெர்ஷன் வீடியோ செம வைரல்

Thanos Avengers End Game : அவெஞ்சர்ஸ் திரைப்படத்தை வைத்து வெளியான வடிவேலு வெர்ஷன் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 28 Feb 2020, 7:57 am
வடிவேலு தமிழ் சினிமாவின் மிக முக்கிய மைல் கல்லாகவே மாறிவிட்டார். தமிழ் நாட்டில் மீம் கிரியேட்டர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம் இன்று வடிவேலு இல்லாமல் ஒரு விஷயம் டிரெண்ட் ஆவதேயில்லை. வடிவேலு அந்த அளவிற்கு மக்களின் வாழ்வியலோடு ஓட்டிப் போய்விட்டார். ஒவ்வொரு தமிழரின் வாழ்வியலிலும் இன்று வடிவேலுவின் ஒரு பகுதி இருக்கும்
Samayam Tamil avengers vadivelu


கடந்தாண்டு வெளியாகி உலக அளவில் ஹிட்டான ஹாலிவுட் திரைப்படம் அவெஞ்சர் எண்ட் கேம். இந்திரைப்படத்தை பார்க்காதவர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு இது பிரபலமாகிவிட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எது பிரபலமானாலும் அதற்கு வடிவேலு வெர்சன் வந்துவிடும். அப்படி வடிவேலு வெர்ஷனுடன் தற்போது ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக வருகிறது.


Also Read : ஒரே நாள் இரவில் 1700 பேரை கொன்று பலி வாங்கிய ஏரி

படத்தின் காட்சிகளுக்கும் வடிவேலுவின் வசனங்களுக்கும் மிகக் கச்சிதமாகப் பொருந்தும் வகையில் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பலர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி