ஆப்நகரம்

பா.ஜ., வை திட்டும் அபிநந்தனின் போலி மனைவி..! வேகமாக பரவும் வீடியோ..!

பெண் ஒருவர் செல்பி வீடியோ எடுத்து ராணுவ வீரர்களின் மரணத்தை யாரும் அரசியல் ஆக்காதீர்கள் என பா.ஜ., வினரை குறிப்பிட்டு பேசினார். இதை பேசியவர் அபிநந்தனின் மனைவி என போலியான செய்தி பரவியது.

Samayam Tamil 1 Mar 2019, 3:21 pm
இந்திய விமானப்படை பைலட் அபிநந்தன் பாக்., ராணுவத்திடம் சிக்கிய நிலையில் இந்தியாவே பரபரப்பிற்குள்ளானது. இது குறித்து பலர் ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் பேச துவங்கினர்.
Samayam Tamil video of woman claiming to be an indian army officers wife has gone viral
பா.ஜ., வை திட்டும் அபிநந்தனின் போலி மனைவி..! வேகமாக பரவும் வீடியோ..!


இதற்கிடையில் பெண் ஒருவர் செல்பி வீடியோ எடுத்து ராணுவ வீரர்களின் மரணத்தை யாரும் அரசியல் ஆக்காதீர்கள். அவர்களின் தியாகம் உண்ணதமானது. நீங்கள் அரசியல் செய்ய நிறைய நேரம் இருக்கிறது. இப்பொழுது நீங்கள் அரசியல் செய்ய தேவையில்லை குறிப்பாக பா.ஜ.,வினர் அரசியல் செய்ய வேண்டாம் என ஆங்கிலத்தில் பேசிய வீடியோ ஒன்று வைரலானது.
Read More: "அபிநந்தன் இனி இந்தியாவின் மகன்"வார்த்தமானை வாழ்த்திய பொதுமக்கள்...!

இந்த வீடியோவின் அவர் தான் ஒரு ராணுவ வீரரின் மனைவி என தன்னை கூறி தான் இந்த உரையை துவங்குகிறார். இந்நிலையில் இந்த வீடியோவில் இருப்பவர் அபிநந்தனின் மனைவி என சிலர் போலியாக தகவல்களை சமூகவலைதளங்களில் பரப்பினர். இந்த வீடியோ சுமார் 2.4 லட்சம் வியூகளையும், 14 ஆயிரம் ஷேர்களையும் பெற்றுள்ளது.

இந்த வீடியோவில் உள்ள பெண்ணிற்கு அபிநந்தனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது சிலரின் போலியான தகவலால் இந்த வீடியோ தவறான தகவல்களும் பரப்பபடுகிறது. இந்த வீடியோ போலியான வீடியோ என பா.ஜ.,வும் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Read More: பாலகோட் தாக்குதலின் போது பிறந்த குழந்தைக்கு "மிராஜ் சிங்" என பெயர் வைத்த பெற்றோர்

அபிநந்தனின் உண்மையான மனைவியின் பெயர் தன்வி மார்வஹா இவர் இந்திய விமானப்படையில் பைலட்டாக இருந்தவர் தான் இவரின் உண்மையான புகைப்படத்தை கீழே வழங்கியுள்ளோம்

உங்களுக்கு இந்த வீடியோ அபிநந்தனின் மனைவி என வந்தால் நீங்கள் அதை யாருக்கும் பார்வேர்டு செய்யாதீர்கள்.

அடுத்த செய்தி