தமிழகத்தின் முன்னனி பத்திரக்கைகளில் பணியாற்றி பெரும் சர்ச்சைகளில் சிக்கி தனியாக யூடியூப் சேனல் துவங்கியவர் மதன். வலதுசாரி ஆதரவாளராக செயல்பட்டு பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர். இவர் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கே.டி ராகவன் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ அவர் ஒரு பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசும் வீடியோவாகும். இந்நிலையில் கே.டி ராகவன் பதவி வில இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. மதன் ரவிச்சந்திரன் மற்றும் அவரது தோழி வெண்பா ஆகியோர் இணைந்து இந்த வீடியோவை வெளியிட்ட நிலையில் இவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதே நேரத்தில் இது குறித்து விசாரிக்க பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை ஒரு குழு ஒன்றை அமைத்தார்.
இந்நிலையில் அண்ணாமலை தான் அந்த வீடியோவை வெளியிட சொன்னதாக ஒரு ஆடியோவை மதன் வெளியிட்டார். இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்து இரு மாதம் ஆன நிலையில் தற்போது மதன் ரவிச்சந்திரனை காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து ட்விட்டரில் #மதன்_எங்கே ஹேஷ்டேக் டிரெண்டாகியுள்ளது. பலர் மதன் ரவிசந்திரன் மாயமாகிவிட்டார் எனவும், சிலர் அவருக்கு என்ன நேர்ந்தது எனவும் கேட்டு வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதில் வரும் சில ட்வீட்களை கீழே காணுங்கள்