ஆப்நகரம்

மீண்டும் ஒரு Deep Fake சோகம், அருவருக்கத்தக்க வகையில் உருவாக்கப்பட்ட பிரபல பாடகியின் AI போட்டோஸ்!

தொழில்நுட்பங்கள் வளரும் போது, அதனுடன் சேர்ந்து சில வேண்டாத எதிர்வினைகளும் சேர்ந்தே வளர்கின்றது. சமீபத்தில் உலகம் முழுவதும் காட்டுத்தீ போல பரவி இருக்கும் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி என்பது நல்லவற்றுக்கு பயன்படுவதை விட, நிறைய அறிவுத் திருட்டு, ஆபாச வேலைகளுக்கே பயன்பட்டு வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

Written byஎன். பி. விஸ்வா | Samayam Tamil 25 Jan 2024, 2:46 pm
AI புரட்சி ஆச்சரியத்தை அளிப்பதை காட்டிலும் அதிகம் அதிர்ச்சியை தான் அளிக்கிறது. முக்கியமாக பெண்கள் பாதுகாப்பு குறித்து காணும் போது. திரைத்துறை முதல் சமூக வலைதள பிரபலங்கள், வெகுஜன பெண்கள் வரை எளிதாக இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் இருந்து புகைப்படங்களை டவுன்லோட் செய்து, அவர்களது முகத்தை பயன்படுத்தி அருவருக்கத்தக்க ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை DeepFake மற்றும் AI நுட்பத்தை பயன்படுத்தி மிக எளிதாக உருவாக்கி விடுகின்றனர்.
Samayam Tamil Taylor swift Deepfake AI photos goes viral on twitter


பாடகி டைலர் ஷிப்ட்-ன் DeepFake AI போட்டோஸ் வைரல்
உலகளவில் பிரபல இசைக்கலைஞராக திகழ்ந்து வரும் டைலர் ஷிப்ட் எனும் பாடகியின் முகத்தை கொண்டு சமீபத்தில் ட்விட்டரில் பகிரப்பட்டு வரும் DeepFake AI புகைப்படங்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மிக வக்கிரமான அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமான முறையில் அவை உருவாக்கி பகிரப்பட்டுள்ளன. இதை சிலர் மேலும், டவுன்லோட் செய்து பகிர்ந்து வந்தாலும், டைலர் ஷிப்ட்-ன் ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் இடையே பெரும் கோபத்தையும், எதிர்வினை கருத்துகளையும் பெற்று வருகிறது.

AI தொழில்நுட்பத்தை கொண்டு கிரியேட்டிவ் திங்கிங்கை வளர்க்க கூறினால், இங்கே கீழ் புத்தி ஜென்மங்கள் சில பெண்களுக்கு எதிராக ஆபாச படங்களை உருவாக்க உபயோகப்படுத்தி வருகின்றன. இவற்றுக்கு உலக அளவில் ஓர் துரிதமான தீர்வு கொண்டு வர வேண்டியது மிக மிக அவசியமாக உள்ளது.

கடுமையான சட்டங்கள் உருவாக்கப்படுமா?
இந்தியாவில் சமீபத்தில் ரஷ்மிகா மந்தனாவின் DeepFake வீடியோ ஒன்று வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, பிறகு இது உடனடியாக இந்திய அரசு அதிகாரிகள் தலையிட்டு துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், இன்றளவிலும் ட்விட்டர், ரெட்டிட் (Reddit) போன்ற சமூக ஊடகங்களில் சாதன வெகுஜன பெண்களில் இருந்து சினிமா பிரபங்கள் வரை பலரது AI DeepFake புகைப்படங்கள் வக்கிர புத்தி கொண்ட பலரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டு தான் வருகிறது. இதற்கு, கடுமையான சட்டங்களும், தண்டனைகளும் உலக அரசுகள் துரிதமாக அமல்படுத்த வேண்டும்.

மேலும், AI தொழில்நுட்பத்தை கட்டுக்குள் வைக்கவும், கண்ட்ரோல் செய்யவும் அரசு அமைப்புகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எழுத்தாளர் பற்றி
என். பி. விஸ்வா
ஊடகவியலில் இளங்கலை பட்டம் முடித்துள்ளார். சமயம் தமிழ் இணையத்தில் டெக்னாலஜி, லைஃப் ஸ்டைல் வைரல் பிரிவில் செய்திகள், சிறப்பு தொகுப்பு கட்டுரைகள் எழுதி வருகிறார். பாடல்கள் கேட்பதிலும், கூடைப் பந்தாட்டத்திலும் ஆர்வம் மிக்கவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி