ஆப்நகரம்

இந்தியா-பாக்., மேட்சில் நீங்கள் பார்க்காமல் நடந்த இந்த விஷயம் தெரியுமா?

இந்தியா - பாக்., போட்டி நடக்கும் போது பார்வையாளர்கள் கேலரி ஒரு நிமிடத்தில் காதல் பொங்கி வழியும் கேலரியாக மாறியுள்ளது.

Samayam Tamil 22 Jun 2019, 5:30 pm
உலககோப்பை தொடர் நடந்து வருகிறது. இந்தியா அந்த தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது. ஒவ்வொரு போட்டியும் முக்கியமான போட்டியாக இருந்தாலும், உலககோப்பை இறுதி போட்டியை விட மிக முக்கியமான போட்டி இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த போட்டி தான் மிக முக்கியமான போட்டி
Samayam Tamil மேட்சில் நீங்கள் பார்க்காமல் நடந்த இந்த விஷயம் தெரியுமா


இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற விஷயம் நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உங்களுக்கு தெரியாத இன்னொரு விஷயமும் நடந்துள்ளது.

இந்தியா - பாக்., போட்டி நடக்கும் போது பார்வையாளர்கள் கேலரி ஒரு நிமிடத்தில் காதல் பொங்கி வழியும் கேலரியாக மாறியுள்ளது. ஒரு பெண் கேலரியில் அமர்ந்து மேட்சை ரசித்துக்கொண்டிருந்த ஒரு போது அங்கு வந்த ஒரு இளைஞன் அந்த பெண்ணிடம் சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி புரோபோஸ் செய்துள்ளார்.
இந்த வீடியோ டுவிட்டரில் வெளியாகி பெரும் அளவில் வைரலாகியது. இந்த வீடியோ வெளியாகி வெறும் 5 மணி நேரத்தில் 24 ஆயிரம் பேர் பார்த்துவிட்டனர். பலர் இந்த ஜோடி திருமணம் செய்து வாழ வாழ்த்தி வருகின்றனர். நீங்களும் அவர்களை கமெண்டில் வாழ்த்துங்கள்.

அடுத்த செய்தி