ஆப்நகரம்

Sethiyathope Helmet Fine : இன்ஜினே இல்லாத பைக்கிற்கு அபராதம் போட்ட போலீசார்...! சினிமாவை மிஞ்சும் காமெடி

கடலூர் மாவட்டத்தி் இன்ஜினே இல்லாத பைக்கிற்கு போலீசார் அபராதம் போட்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இது குறித்த விரிவான செய்திகளை கீழே காணுங்கள்.

Samayam Tamil 13 Nov 2019, 2:57 pm
இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு சாலை போக்குவரத்து சட்டத்தை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தின் தொகை அதிகரிக்கப்பட்டது.
Samayam Tamil இன்ஜினே இல்லாத பைக்கிற்கு அபராதம் போட்ட போலீசார்


கடந்த செப்., மாதம் 1ம் தேதி இது நடைமுறைக்கு வந்தது முதல் இந்தியா முழுவதும் போலீசார் வாகன தணிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு வகையில் மக்களைச் சாலை விதிகளை மதிக்க வைத்தாலும் ஒரு சில போலீசார் செய்யும் காரியங்கள் காமெடியாகி போகிறது.

காரில் வருபவர்களுக்கு ஹெல்மெட் அபராதம் விதிப்பது, பைக்கில் செல்பவருக்கு சீட்பெல்ட் அபராதம் விதிப்பது போன்ற காமெடிகள் எல்லாம் அரங்கேறியுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் அதே போன்ற ஒரு காமெடி அரங்கேறியுள்ளது.

Also Read : சொல்லிவைத்தாற்போல அடுத்தடுத்த பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்! 3 பிரசவத்தில் 5 குழந்தைகளுக்கு தாயான பெண்...!

கடலூர் மாவட்டம் சேத்தியாத் தோப்பு என்ற பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடடுக்கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக ஒரு வாலிபர் இன்ஜின் பழுதான தனது வண்டியை மெக்கானிக்கிடம் கொடுத்து இன்ஜினை கழட்டிவிட்டு இன்ஜின் இல்லாத வண்டியை உருட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.

அவர் வண்டியை உருட்டிக்கொண்டு வருவதை பார்த்த போலீசார் அவர் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் அபராதத்திலிருந்து தப்பிக்கவே இப்படி வண்டியை உருட்டிக்கொண்டு வருகிறார் என நினைத்த போலீசார் அவருக்கு ஹெல்மெட் இல்லை என அபராதம் விதித்ததாகத் தெரிகிறது.

Also Read : "வேட்டையாடு விளையாடு" ஸ்டைலில் திருமண மண்டபத்திலேயே காதலை சொல்லிய நம்ம ரியல் ஹீரோ...! சுபமாக முடிந்த காதல் கதை

அவர் தனது பைக்கில் இன்ஜினே இல்லை எனவும், இன்ஜின் ரிப்பேர் என்பதால் பைக்கை உருட்டிக்கொண்டு வருவதாக போலீசாரிடம் விளக்க முயன்றும் பலனில்லாமல் போனது.

மோட்டார் வாகன சட்டம் என்பது இன்ஜின் இருக்கும் பைக்குகளுக்குதான். இன்ஜினே இல்லாத பைக், பைக் என்றே கருத முடியாது. அதற்கு மோட்டார் வாகன சட்டம் செல்லுபடியாகாது. என்பது தெரியாமல் போலீசார் இன்ஜினே இல்லாத பைக்கிற்கு இப்படி சட்டம் போட்டது தற்போது வைரலாகியுள்ளது.

Also Read : சிறுத்தையும் நாயும் நண்பர்களாக கொஞ்சி குலாவும் அரிய வீடியோ..!

போலீசார் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் தான் ஆனால் அதற்கு முன்னர் அவர்கள் எது சாலை விதிமுறை மீறல் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி